கோவை, நவ.4- பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் தந்த விவசாயிகள், கோரிக்கைகள் குறித்து பேச முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கி தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் திங்களன்று மனு அளித்த னர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத் திற்கு, அப்பகுதியில் உள்ள விவசாயிகள் நிலம் கொடுத்தனர். இரண்டு தலை முறையை கடந்து விட்டபோதும், இந்த விவசாயிகளுக்கு, இதுவரையில் உரிய இழப்பீடு கொடுக்கப்படவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் ஒருபகுதி இழப்பீடு மட் டும் வழங்கப்பட்டது. நிலம் கொடுத்த விவ சாயிகள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெ டுத்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்டத்திற்கு கள ஆய்விற்கு வரும் முதல் வரின் கவனத்திற்கு தங்களது கோரிக் கையை கொண்டு செல்லும் முகமாக முதல் வரை சந்திக்க நேரம் கேட்டு ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர். முன்னதாக இந்த மனு அளிக்கும் நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆறுச்சாமி, தொண்டாமுத்தூர் ஒன்றியக் குழு செயலாளர் மணி, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் வி.பி.இளங் கோவன், மாவட்டப் பொருளாளர் தங்கவேல் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் தந்த விவசாயிகள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.