tamilnadu

img

பெருமாள் கோவில் கொடிமரத்தை புதுப்பிக்கக் கூடாதாம்! சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் தொடர் அராஜகம்

சிதம்பரம், நவ. 4 -  சிதம்பரம் நடராஜர் கோயில் வளா கத்திற்குள், பெருமாளுக்கும் சன்னதி உள்ள நிலையில் அதற்கான கொடி  மரத்தைப் புதுப்பிக்க விடாமல், தீட்சி தர்கள் அராஜகத்தில் ஈடுபட்டதுடன், நீதிமன்றத்திற்கும் சென்று தடை யுத்தரவு பெற்றுள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் வளா கத்துக்குள் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. இது இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்றாலும், நடராஜர் கோயில் தீட்சிதர்களே பெருமாள் கோயிலையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இதனிடையே, ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்த துடன், கோயில் அறங்காவலர்களும் இந்து அறநிலையத்துறைக்கு கடிதம் வழங்கினர். 

ஆனால், பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதற்கு நடராஜர் கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரி வித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த னர். இந்த சூழலில், தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோவி லின் சேதமடைந்த கொடிமரத்தை யாவது புதுப்பிப்பது என்ற பெருமாள் கோவில் நிர்வாக அறங்காவலர் சுதர் சன் மற்றும் பட்டாச்சாரியார்கள் முடிவு செய்தனர். அதன்படி பழைய கொடி மரத்தை அகற்றுவதற் கான முதற்கட்டப் பணி (நவ.3) இரவு சுமார் 8 மணிக்கு நடைபெற்றது. 

அப்போது, நடராஜர் கோயில் தீட்சி தர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு,  பிரமோற்சவம் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள தால், கொடி மரம் மாற்றுவது உட்பட எந்தப் பணியையும் செய்யக்கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட் டனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி னர். இரவு 11 மணி வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. நவம்பர் 4 அன்று காலை கொடிமரம் அமைப்ப தற்காக இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன்  தலைமையில் அறநிலையத்துறை யினரும் காவல்துறையினரும் கோவி லுக்கு வந்தபோது, மீண்டும் எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள் வாக்குவாதம் செய்தனர். கொடி ஏற்றுவதற்கு வளை யம் வைக்க கூடாது. பழமை மாறக்  கூடாது என்று சாக்குப் போக்கு  நிபந்தனைகளை விதித்து கடிதம் கேட்டனர். இந்து அறநிலையத்துறை யினரும் அவ்வாறு கடிதமும் வழங்கினர்.

ஆனால், திடீரென அதையும் ஏற்க மறுத்த தீட்சிதர்கள் 1 மணி நேரம் அவகாசம் கேட்டு காலம் கடத்தினர்.

இதற்கிடையே, சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தாக்கல் செய்திருந்த வழக்கு, திங்களன்று (நவ.4) காலை 11 மணிக்கு விசாரணைக்கு வந்தது. இதில்  பெருமாள் கோயில் தரப்பு வழக்கறி ஞர் மற்றும் நடராஜர் கோயில் வழக்கறி ஞர் தரப்பு வாதங்களைக் கேட்ட சிதம்பரம் சார்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், அடுத்த 15 நாட்களுக்கு கொடிமரம் அமைக்க எந்த பணியை மேற்கொள்ள கூடாது. தற்போது இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தீட்சிதர்களுக்கு சாதகமான இந்த தீர்ப்பு மூலம் கொடிமரம் நடும் நிகழ்ச்சியும் தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.