districts

img

பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

மேட்டுப்பாளையம், நவ. 4- மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரு வதால், பில்லூர் அணையின் நீர்மட் டம் ஒரே நாள் இரவில் 9 அடி உயர்ந் துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்ட  மக்களின் முக்கிய குடிநீர் ஆதார மாகவும் பாசன ஆதாரமாகவும் பில் லூர் அணை உள்ளது. நீலகிரி மாவட்டத்தின் வன பகுதிகள் மற் றும் கேரள காடுகளில் பகுதிகளில்  பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டுள்ள பில்லூர் அணையை  நம்பி 15 க்கும் மேற்பட்ட குடிநீர் திட் டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கின்றன. இந்நிலையில், நீலகிரி மலைக் காடுகள் மற்றும் மேட்டுப்பாளை யம் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்த நிலையில், பில்லூர்  அணைக்கான நீர் வரத்து அதிக ரித்து அதன் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. தொடர் கனமழை கார ணமாக பில்லூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரமான 100 அடி யில் சனியன்று இரவு 8 மணி நிலவ ரப்படி 82 அடியாக நீர் இருப்பு  இருந்தது. ஞாயிறன்று காலை அணையின் நீர்மட்டம் 91 அடியாக  உயர்ந்துள்ளது. அதாவது, ஒரே  நாள் இரவில் 9 அடி நீர் மட்டம் பில் லூர் அணையில் உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஞாயிறன்று நீர் மின் உற்பத்தி பணிக்காக அணை யில் இருந்து பவானி ஆற்றில் வினா டிக்கு 6 ஆயிரம் கன அடி நீர்  திறக்கப்பட்டு வருகிறது. மழை தொடர்ந்து பெய்தால் அணையின்  நீர்மட்டம் 97 அடியை  கடக்கும்  போது பாதுகாப்பு கருதி அணை யின் நான்கு மதகுகளும் திறக்கப் பட்டு அதன் உபரி நீர் பவானி யாற்றில் அப்படியே திறந்து விடப்ப டும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி யில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவது இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீடு இடிந்து சேதம் கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் நகரின் பல்வேறு பகுதி களில் சனியன்று இரவு முதல் ஞாயி றன்று அதிகாலை வரை சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய் தது. இதனால், நகரின் பல்வேறு  பகுதிகளில் மழை நீர் தேங்கியது.  சாலைகளில் வெள்ள நீர் பெருக் கெடுத்து ஓடியது. மேட்டுப்பாளை யம் - சிறுமுகை சாலையில் சங்கர் நகர் பகுதியில் 3 மின்கம்பங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்து வந்த மின்வாரியம், காவல் துறை, தீயணைப்பு துறை யினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும்  மேலாக போராடி சாலையில் முறிந்து விழுந்த மரங்களை மரம்  அறுக்கும் இயந்திரத்தின் உதவி யுடன் வெட்டி அப்புறப்படுத்தி மின்  இணைப்பை சீரமைத்தனர். தொடர்ந்து, பல்வேறு பகுதிக ளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீர மைப்பிற்கு பின்னர் மின் இணைப்பு  கொடுக்கப்பட்டது. இந்நிலையில், மேட்டுப்பாளை யம் நகராட்சிக்குட்பட்ட 33 ஆவது வார்டு நடூர் முனியப்பன் கோவில் வீதியில் இடியும் நிலையில் இருந்த பயன்படுத்தப்படாத வீடு தொடர் கனமழையின் காரணமாக ஞாயிறன்று அதிகாலை இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக வீட்டில்  யாரும் வசிக்காததால் உயிர் சேதம்  தவிர்க்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் அதிகள வில் பொதுமக்கள் வசித்து வரு கின்றனர். பல வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் வரு வாய் துறை மற்றும் நகராட்சி நிர்வா கம் தகுந்த நடவடிக்கை எடுத்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ள  வீடுகளை அப்புறப்படுத்த வேண் டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.