புதுதில்லி, நவ. 4 - நாடாளுமன்றத்தில் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு, மலையாளத்தில் கடிதம் எழுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கண்ட னம் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய பாஜக அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு, நாடாளுமன்றத்தில் உறுப் பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இந்தியில் மட்டுமே பதிலளித்து வரு கிறார். இதற்ககு எதிராக, தனது கண்டனத்தைப் பதிவு செய்யும் வித மாகவே ஜான் பிரிட்டாஸ் மலை யாள மொழியில் கடிதம் எழுதி யுள்ளார்.ஒன்றிய பாஜக அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு, நாடாளுமன்றத்தில் உறுப் பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இந்தியில் மட்டுமே பதிலளித்து வரு கிறார். இதற்ககு எதிராக, தனது கண்டனத்தைப் பதிவு செய்யும் வித மாகவே ஜான் பிரிட்டாஸ் மலை யாள மொழியில் கடிதம் எழுதி யுள்ளார்.
மொழிப் பிரச்சனைகள்
நாடாளுமன்றத்தில் தென்னிந் திய எம்.பி.க்கள் எதிர்கொள்ளும் பெரும் சவால்களில், இந்தி மொழியிலான அவை நடவடிக்கை கள் ஆகும். இதனால், இந்தி தெரி யாத உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படு கிறது. ஆங்கிலம் நன்கு தெரிந்த அமைச்சர்களும் கூட, இந்தியி லேயே பேசுகின்றனர் என்பது எம்.பி.க்கள் நீண்டகாலக் குற்றச்சாட்டு ஆகும்.
சட்ட விதிகள் மீறல்
1963-ம் ஆண்டின் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தின்படி, ஒன்றிய அரசின் அனைத்து அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளிலும் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டுமே பயன் படுத்தப்பட வேண்டும். நாடாளு மன்ற விவாதங்களிலும் இரு மொழி களும் அனுமதிக்கப்பட வேண்டும். இந்தியை அதிகாரப்பூர்வ மொழி யாக ஏற்காத மாநிலங்களுடனான தொடர்புகளில் ஆங்கிலம் பயன் படுத்தப்பட வேண்டும்.
“ஒன்றிய அரசு இந்த விதிகளை பல ஆண்டுகளாக மதித்து நடந்து வந்தது. ஆனால் தற்போதைய நிர் வாகம் இந்தியை மட்டுமே முன்னி லைப்படுத்துகிறது. இது மொழிப் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் செயல். தென்னிந்திய மக்களின் உரிமைகளை பறிக்கும் முயற்சி” என்று ஜான் பிரிட்டாஸ் எம்.பி. தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இரயில்வே அமைச்சகம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலம் தெரிந்த அதிகாரிகளும் இந்தியிலேயே பதிலளிக்கின்றனர். தென்னிந்திய எம்.பி.க்களின் கேள்வி களுக்கும் இந்தியிலேயே பதில் வழங்கப்படுகிறது. மொழிவாரி பிரச் சனை நாளுக்கு நாள் தீவிரமடைகிறது.
இந்தி - ஆங்கிலம் இரண்டையும் சமமாக பயன்படுத்த வேண்டும். மொழி அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது. அனைத்து எம்.பி.க்களும் சமமாக பங்கேற்கும் வகையில் நாடாளுமன்ற நட வடிக்கைகள் அமைய வேண்டும். மொழி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த பிரச்சனை குறித்து பல்வேறு தென்னிந்திய எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வரு கின்றனர். ஆனால் ஒன்றிய அரசின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்பட வில்லை என்பது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.
நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா, மரத்துப் போனதா?
அலுவல் மொழி விதிகளை மீறக் கூடாது என்று நீதிமன்றங்கள், ஒன்றிய அரசின் தலையில் குட்டியது மறந்து போனதா? இல்லை மரத்துப் போனதா? என்று சிபிஎம் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஆங்கிலம் நன்கு அறிந்த அமைச்சர்கள் கூட நாடாளுமன்றத்தில் இந்தியில் பதில் சொல்வதும், பேசுவதும், இந்தி பேசாத மாநிலங்களின் எம்.பி.க்களுக்கு இந்தியில் கடிதங்கள் எழுதுவதும் அதிகரித்துள்ளது. அறியாமல் நடைபெறும் தவறு அல்ல. அறிந்தே இந்தி திணிப்பை செய்கிறார்கள். தென் மாநில எம்.பி.க்கள் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் கவலை இல்லை என்றே கருதுகிறார்கள். ஏற்கெனவே நான் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், உள்துறை இணை அமைச்சர் எனக்கு இந்தியில் எழுதிய கடிதம் தொடர்பாக தொடுத்த வழக்கில் ‘அலுவலகத்திலிருந்து தவறுதலாக அனுப்பப்பட்டுவிட்டது’ என்று ஒன்றிய அமைச்சர் பதில் அளித்தார். அமைச்சரின் பதிலை ஏற்றுக் கொண்டு, இனி அலுவல் மொழி விதிகளை மீறக் கூடாது என்று உயர் நீதி மன்றம் ஒன்றிய அரசின் தலையில் குட்டியது மறந்து போனதா? இல்லை மரத்துப் போனதா?” என்று சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.