தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் தனது தொகுதியான கொளத்தூரில் திங்களன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 2017-ஆம் ஆண்டு தங்கை அனிதா- மரணமடைந்த போது என்று சொல்லக்கூடாது- தற்கொலை செய்து கொண்ட போது, நாம் எல்லோரும் தாங்க முடியாத சோகத்திற்கும் பெரிய வேத னைக்கும் ஆளானோம்.
அதற்கு என்ன கார ணம் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.நீட் தேர்வு, அவரின் கனவைச் சிதைத்து – உயிரையும் பறித்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கல்விக் கனவை சிதைக்கும் நீட்தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் இன்று வரையிலும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு நிச்சயம் ஒரு நாள் ஒன்றிய அரசு பணியத்தான் போகிறது. அது நடந்துதான் தீரும். அதில் எந்த மாற்ற மும் இல்லை. இன்றைக்கு இல்லாவிட் டால் நாளைக்கு, நாளைக்கு இல்லாவிட் டால் நாளை மறுநாள். அது நிறைவேற்றப் படும். இந்நிலையில் தான், அனிதாவின் நினைவாக, முன்னேறத் துடிக்கும் இளை ஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில், அதற்கு முதல் வாய்ப்பை ஏற்படுத்தித் தரக் கூடிய பயிற்சி மையமாக 2019-ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியை நாம் தொடங் கினோம். இந்த அகாடமி, பயிற்சியுடன் கூடிய இலவச வேலைவாய்ப்பு மையமாக செயல்பட தொடங்கியது. இங்கே இது வரைக்கும் பன்னிரண்டு பேட்சுகளில் 974 பெண்களும், எட்டு பேட்சுகளில் 538 ஆண் களுமாக இதுவரைக்கும் 1,512 பேர் டேலி (Tally) பயிற்சி முடித்து இலவச மடிக் கணினி பெற்றிருக்கின்றனர். எட்டு பேட்சு களில் 2,536 மகளிர் தையல் பயிற்சி முடித்து விட்டு, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற்றிருக்கின்றனர். சாதாரண பின்புலங்களில் இருந்து வரும் மாணவர் களுக்கு அனிதா அச்சீவர்ஸ் அகாடமி யானது வாய்ப்பை உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறது.
யார் யாரோ வருகிறவர்கள் எல்லாம் புதிது புதிதாக கட்சியைத் தொடங்கு பவர்கள் எல்லாம் திமுக ஒழிய வேண்டும்; அழிய வேண்டும் என்று அந்த நிலையில் தான் போய்க்கொண்டு இருக்கிறார்களே தவிர, நான் அவர்களை எல்லாம் பணி வோடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புவது, இந்த மூன்றரை ஆண்டு காலத் தில், நான்கு ஆண்டுகள் தொடக்கூடிய இந்த நிலையில், இந்த ஆட்சி செய்திருக் கின்ற சாதனைகளை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள் என்பதுதான். இவ்வாறு முதல் வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.