districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

விசாரணைக்கு அழைத்து போக வந்த கர்நாடக போலீசுக்கு மனைவி எதிர்ப்பு

நாமக்கல், நவ. 4- கர்நாடக போலீஸ் கணவரை விசாரணைக்கு அழைத்துச்  செல்வதற்கு, மனைவி எதிர்ப்பு  தெரிவித்து போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போடூர் பகுதியைச் சேர்ந்த உறவி னர்களான நாகபூஷ்ணம்(26) - யுவராணி (24) ஆகியோர் காத லித்து திருமணம் செய்து கொண்டனர் . இவர்களின் திரு மணத்த்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளி பாளையம் அருகில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு  குடியேறி வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் திங்களன்று, கர்நாடகா மாநிலம் பூதிக் கோட்டை பகுதி காவல் நிலைய உதவி ஆய்வாளர், தலைமை  காவலர் ஆகியோர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஒரு சந்தேக வழக்கில் ,நாக பூசனத்தை அழைத்துச் செல்வ தாக தகவல் அளித்து அழைத்துச் செல்ல முயன்றனர். அப் பொழுது பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு வந்த நாக பூஷணத்தின் மனைவி யுவராணி தாங்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால் எங் களை பிரிப்பதற்காக நாக பூசுனத்தின் தந்தை கிருஷ்ணப்பா  தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அதன் ஒரு  கட்டமாக தற்பொழுது கர்நாடகா போலீசை ஏவி விட்டு  எங்களைப் பிரிக்க முயற்சி செய்வதாக காவல் நிலையத்தில்  தகராறில் ஈடுபட்டார் . இதனை அடுத்து நாக பூசணத்தை கர்நாடக போலீ சார் அழைத்துச் செல்ல முயற்சி செய்தபோது யுவ ராணி நாகபூசணத்தை கையைப் பிடித்துக் கொண்டு விட மாட்டேன் என கூறி கர்நாடகா போலீசார் உடன் நடு ரோட்டில் தகராறு ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பொது மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு நிலவியது.  உடனடியாக கர்நாடகா போலீசார் பள்ளிபாளையம் போலீசாரிடம் தாங்கள் பூதிக்கோட்டை காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனம் திருட்டு  சம்பவம் நடைபெற்று உள்ளது. திருட்டு நடைபெற்ற சம யத்தில் நாகபூஷணத்தின் செல்போன் டவர்  அந்தப் பகுதி யில் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் அவரை அழைத்துச் சென்று விசாரிக்க உள்ளதாகவும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கடிதம் வழங்கினர் .இதனை அடுத்து பள்ளிபாளையம் போலீசார் யுவராணியிடம் சமர சத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு வழியாக சமரசம் செய்து  யுவராணியையும் நாக பூசணத்தையும் கர்நாடக மாநி லத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.இந்த  சம்ப வத்தால் பள்ளிபாளையம் காவல் நிலையம் முன்பு பெரும்  பரபரப்பு நிலவியது.

ஆறு மாதம் கழித்து பருத்தி நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது

திருப்பூர், நவ.4 – திருப்பூரில் பனியன் உற்பத்திக்கு  மூலப்பொருளான பருத்தி நூல்  விலை நவம்பர் மாதம் தொடங்கி யுள்ள நிலையில், கிலோவுக்கு ரூ.10  குறைந்துள்ளது. கடந்த 6 மாத காலமாக நூல்  விலை மாற்றம் இல்லாமல் இருந்தது.  இந்த நிலையில், நவம்பர் மாதம் தொடங்கியுள்ள நிலையில், பருத்தி  நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது.  பின்னலாடை ஜவுளிச் சந்தை யின் டிமாண்டிற்கு ஏற்ப உற்பத்தி  நடைபெறும். கேட்பு அதிகரித்தால் உற்பத்தியும் அதிகரிக்கும். இதனால்  பருத்தி நூல் வரத்தைப் பொறுத்து விலை தீர்மானிக்கப்படும். பின்ன லாடை உற்பத்தி அதிகரிக்கும் நிலை யில், பருத்தி நூல் வரத்து குறைவாக  இருந்தால் நூல் விலை அதிகரிக்கும்.  அதேசமயம், பருத்தி நூல் வரத்து  அதிகமாக இருந்தால் நூல் விலை  குறையும்.பின்னலாடை உற்பத்தி  மையமாக இருக்கும் திருப்பூர்,  பின்னலாடை ஏற்றுமதி மூலம் அந்நி யச் செலவாணியை ஈட்டித் தரக்கூ டிய மிக முக்கியத் தொழில் நகரமாக  இருக்கிறது. பின்னலாடை உற்பத்தியில் மூலப்பொருளான பருத்தி மற்றும் பருத்தி நூலின் விலை தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது. கொரோனா காலத்திற்குப் பின்னர் நூல் விலை நிச்சயமில்லாமல் இருந்தது. குறிப்பாக கடந்த 2022,  2023ஆம் ஆண்டு நூல் விலை நிலை யில்லாமல் உயர்ந்து வந்தது. இது  சிறு, குறு, நடுத்தர உற்பத்தியாளர் களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்ப டுத்தியது. பலர் இத்தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத சூழ லுக்குத் தள்ளப்பட்டனர்.  அதிகரித்து வந்த நூல்  விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவ டிக்கைகளை எடுக்க ஒன்றிய, மாநில அரசுகளை தொழில் துறையி னர் மட்டுமின்றி தொழிற்சங்கங்கள், இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து வலி யுறுத்தினர். வெளிநாடுகளுக்கு பருத்தி ஏற்ற்றுமதி செய்வதை கட் டுப்படுத்தி, உள்நாட்டு உற்பத்திக்குத்  தேவையான அளவு பருத்தி நூல் கிடைக்க வழி செய்ய வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்த னர். எனினும் ஒன்றிய அரசு இக்கோ ரிக்கையைக் கண்டு கொள்ள வில்லை. மாறாக பருத்தி விவசாயி களுக்கு நல்ல விலை கிடைக்கிறது என்று சொல்லி, நியாயப்படுத்தி இடைத்தரகர்கள் கொள்ளைக்கு ஆதரவாக இருந்தனர். மாதம் ஒரு முறை நூல் விலை நிர்ணயம் செய்யப் பட்டு வந்த நிலையில், மாதத்தின் முதல் தேதியும் 15 ஆம் தேதியும் நூல் விலை நிர்ணயம் செய்து அறி விப்பு வெளியிடப்படும் என நூற்பா லைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுவாக உலகச் சந்தை மந்த  நிலையில் நீடித்து வருவதால் ஏற்று மதியும் சரிந்தது. எனவே 2024ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து நூல் விலையும் சரிவைச் சந்தித் தது. 2024 ஜனவரி மாதம் தொடங்கி 5  மாத காலத்தில் நூல் விலை கிலோ விற்கு 45 ரூபாய் வரை குறைந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 6 மாத காலம் நூல் விலையில் மாற்றம் இல் லாமல் நீடித்தது.  தீபாவளி முடிந்து திங்களன்று நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்டனர். இதில் கடந்த மாதங் களைக் காட்டிலும் பருத்தி நூல்  விலை கிலோவிற்கு ரூ.10 குறைந் தது. அனைத்து வகையான நூல்க ளின் விலையும் ரூ.10 குறைக்கப்பட்டு உள்ளது பின்னலாடை உற்பத்தி யாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது.  10 ஆவது நம்பர் கோம்டு நூல் விலை (கிலோவுக்கு) ரூ.266க்கும், 16ஆம் நம்பர் ரூ.270க்கும், 20ஆ வது நம்பர் ரூ.270 க்கும், 25ஆவது நம் பர் ரூ.27-க்கும், 30ஆவது நம்பர் ரூ.291 க்கும், 34ஆவது நம்பர் ரூ.298 க்கும்,  40ஆவது நம்பர் ரூ.347 க்கும், 20 ஆவது நம்பர் சூப்பர் கோம்டு நூல்  ரூ.277 க்கும், 25ஆவது நம்பர் ரூ.286  க்கும், 30ஆவது நம்பர் சேமி கோம்டு,  ரூ.280 க்கும், 34ஆவது நம்பர் ரூ.287 க்கும், 40ஆவது நம்பர் ரூ.308 க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.

தெரு நாயை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை

திருப்பூர், நவ.4- சாக்கடை கால்வாயில் சிக்கி தவித்த தெரு நாயை  பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.    திருப்பூர் மாநகராட்சி ராயபுரம் பகுதியில் பூங்கா அருகே  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாக்கடை கால்வாய் கட்டப் பட்டு வருகிறது. இந்த கால்வாயில் ஞாயிறன்று இறங்கிய தெரு நாய் ஒன்று, வெளியேற வழி தெரியாமல் தவித்து வந் துள்ளது. விடுமுறை தினம் என்பதால் கடைகளும் அடைக் கப்பட்டு இருந்ததால் நாய் சாக்கடைக்குள் இருந்தது பொது மக்களுக்கு தெரியவில்லை. திங்களன்று தெருநாய் ஒன்று  சாக்கடைக்குள் சிக்கி இருப்பதை தன்னார்வலர்கள் கண்டு  தீயனைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ  இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி சாக்கடை கால்வாயில் இருந்த  நாயை பத்திரமாக மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத் திற்கு உடனடியாக வந்ததோடு லாவகமாக நாய்க்கு எந்த  வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பத்திரமாக  மீட்ட தீய னைப்புத் துறையினரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக  பாராட்டினர்.

பணியிடத்தில் விபத்து: உதவ மறுக்கும் உரிமையாளர்

ஈரோடு, நவ. 4- பணியிடத்தில் நடைபெற்ற விபத்தில் பாதிக்கப்பட்ட  பெண் தொழிலாளிக்கு உதவ மறுக்கும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஈரோடு ஆட்சியரிடம் திங்களன்று பாதிக்கப்பட்டவர் மனு அளித்தார். ஈரோடு மாவட்டம், ஈபிபி நகரில் வசித்து வருபவர் நவ நீதன் மனைவி சரோஜா. இவர் பெரியசேமூர் பகுதியில் இயங்கி வரும் ஈரோடு பேப்பர் கோன்ஸ் என்ற நிறுவ னத்தில் 3 வருடங்களாக வேலை செய்து வந்தார். கடந்த  2023 அக்டோபர் மாதம் வேலை செய்து கொண்டிருந்த சரோஜா மீது பேப்பர் கோன் டிராலி விழுந்தது. இதனால்,  முதுகு பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லாமல் அந்நிறுவனத்தின் உரிமை யாளர் வலி நிவாரண மாத்திரை வாங்கிக் கொடுத்து அனுப்பி னார். அதனை மறுத்த சரோஜா கிருஷ்ணா மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முதுகு தண்டு பகுதியில் பெரிய பிரச்சனை உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என வும் தெரிவித்தனர். அதற்கு சுமார் ரூ.1.50 லட்சம் செலவா கும் என கூறப்பட்டது. இந்த தொகையை செலுத்த முடியாத  நிலையில்  அவர் பணிபுரிந்த நிறுவனத்தை அணுகியபோது,  அதன் உரிமையாளர் சாக்குபோக்கு சொல்லி வருகிறார்.  இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் மற்றும் வலியினால் எந்த  வேலையும் செய்ய முடியவில்லை. எனவே எனது வறு மையைக் கணக்கில் கொண்டு தொழிலாளர் நலத்துறை மூலம் உரிமையாளரிடம் இழப்பீடு பெற்றுத்தர நடவ டிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் முறை யிட்டுள்ளார்.

ஆம்புலன்சில் வந்து மனு அளித்த தாய்

ஆம்புலன்சில் வந்து மனு அளித்த தாய் நாமக்கல், நவ. 4. மின்சாரம் தாக்கிய மகனுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என தாய் ஒருவர் ஆம்புலன்சில் வந்து மனு அளித்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.   நாமக்கல் மாவட்டம் பரமத்தி  அகதிகள் முகாமைச் சேர்ந்த வர் அஜய் குமார், இவர் பெயிண்டிங் வேலை செய்து வரு கிறார். கடந்த அக்டோபர் 9 ஆம்தேதி வேலைக்கான பணம்  பெற விஜயகுமார் என்பவர் வீட்டிற்கு சென்றபோது, மின்சா ரம் தாக்கி படுகாயமடைந்தார். சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காப் பாற்றப்பட்டது. இந்நிலையில் முறையான பராமரிப்பு இல்லா ததால் மின்சாரம் தாக்கியுள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து, நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என காவல் நிலையத் தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே ஆட்சியர் தலையீடு செய்ய வேண்டும் என  அஜய்குமாரின் தாய் நாமக்கல் ஆட்சியிடம் மனு அளித் தார்.