districts

img

பட்டா, அடிப்படை வசதிகள் கேட்டு மனு

ஈரோடு, நவ.4- ஆப்பக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள், பட்டா மற் றும் அடிப்படை வசதிகள் கேட்டு, ஆட்சி யர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் திங் களன்று மனு அளித்தனர்.  ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் பேரூராட்சியின் 14 ஆவது வார்டுக்குட் பட்ட பகுதியில் சுமார் 400 குடும்பத்தினர்  வசித்து வருகின்றனர். இப்பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து  தரப்படவில்லை. குறிப்பாக, ஆப்பக்கூ டல் கிராம நிர்வாக அலுவலகம் எதிரில் உள்ள தெருவிலிருந்து சந்தைக்கடை  வரை செல்லும் வடிகால் கடந்த 50  ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட் டது. கிராம ஊராட்சியாக இருந்த போது  அமைக்கப்பட்ட சாக்கடை தற்போது வரை சீரமைக்கப்படவில்லை. கழிவு நீர்  மேவிச் சென்று மிகுந்த சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. காமரா ஜர் வீதியில் கழிப்பறைகள் கதவு, தண் ணீர், மின் விளக்கு வசதிகள் இல்லை. எனவே, இப்பகுதியில் உள்ள அடிப் படை பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்  என மனு அளித்தனர். இதில், மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.  இதேபோன்று, ஈரோடு மாவட்டம்,  பவானி அருகே ஆப்பக்கூடல் பேரூ ராட்சிக்குட்பட்ட காமராஜர் நகரில் 26 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வரும் இவர்களுக்கு வீட்டு மனை பட்டா இல்லை. இதுகுறித்து கடந்த 10 ஆண்டுகளாக வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திலும் முறையிட்டும் எவ்வித முன் னேற்றமும் இல்லை. எனவே, சாதா ரண ஏழைஎளிய மக்களின் நிலையை உணர்ந்து பட்டா வழங்க வேண்டும் என  மனு அளித்தனர். அப்பகுதி மக்களு டன் விதொச மாவட்டப் பொருளாளர் எஸ்.மாணிக்கம் உடனிருந்தார்.