tamilnadu

மக்கள் ஒற்றுமை, சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையைப் பாதுகாப்போம்!

தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார நலன்களை கண்டுகொள்ளாத பாஜக, தமிழ்நாட்டின் அமைதி, மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை சீர் குலைக்கும் சதிவேலைகளை மேற் கொண்டு வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. காவல்துறை இப்பிரச்சனையில் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, சிறு பான்மையினரின் வழிபாட்டு உரிமை யைப் பாதுகாப்பதற்கு தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டத்தில், இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் வருமாறு: தமிழ்நாட்டின் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்று மையையும் திட்டமிட்டு சீர்குலைக்க மத வெறி சக்திகள் தொடர்ச்சியாக முயற்சி களை மேற்கொண்டு வருகின்றன. அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் தமிழ்நாட்டு மக்கள் மதவெறி சக்திகளை புறக்கணித்தே வருகின்றனர். மாநி லத்தின் பொருளாதார நலன்களை முற்றி லும் புறக்கணிக்கிற பாஜக, மக்கள் மத்தி யிலேயே பிரிவினையை ஏற்படுத்தி அர சியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது. அவர்கள் மேற்கொண்ட அனைத்து சீர்குலைவு நடவடிக்கைகளுக்கும், திசை திருப்பல்களுக்கும் இடம் கொடுக்காமல் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் உட்பட அனைத்து அம்சங்களிலும் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை புறக்கணித்தே வரு கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பரங்குன்றத்தில்  பாஜக கலவரத் திட்டம்

இந்நிலையில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி தற்போது தனது அடுத்தகட்ட மதவெறித் திட்டத்தை பாஜகவும், அதன் சங்பரிவார அமைப்புகளும் அரங்கேற்றியுள்ளன. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம்- முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக  கருதப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலை  அடிவாரத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும், மலையின் தென்புறம் காசி விஸ்வநாதர் கோவிலும், கீழ்புறம் உச்சிப்பிள்ளையார் கோவிலும் அமைந்துள்ளன. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா அவு லியா தர்கா அமைந்துள்ளது. நீண்ட  காலமாக மக்கள் எவ்வித பிரச்சனையு மின்றி வழிபாடு செய்து வருகின்றனர். மலை உச்சியில் அமைந்துள்ள தர்காவில் கந்தூரி கொடுப்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இங்கு ஆடு, கோழி பலியிட்டு அன்ன தானம் செய்யும் நடைமுறை உள்ளது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக் களும் தர்காவிற்கு சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனர்.  பதற்றத்திற்கு வழிவகுத்த காவல்துறை நடவடிக்கைகள்

இந்நிலையில் 25.12.2024 அன்று தர்காவிற்கு நேர்த்திக்கடன் செலுத்த சென்றவர்களை காவல்துறை யினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். காலம் காலமாக எவ்வித பிரச்சனையுமின்றி நடைபெற்று வந்த நேர்த்திக்கடன் நடைமுறையையும், சிறுபான்மை மக்களின் கந்தூரி வழி பாட்டு உரிமையையும் தடுத்ததோடு, காசி  விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுக்களுடன் கூடிய வழிப்பாதை யை எவ்வித உத்தரவுமின்றி அடைத்து பெரிய ரத வீதியில் அமைந்துள்ள மலைப்பாதை வழியாகத் தான் மக்கள் செல்ல வேண்டுமென்று தடுத்த காவல் துறையின் இந்நடவடிக்கை தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரண மாக இருந்துள்ளது.  காவல்துறையினரின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு வன்மையாக கண்டிப்பதோடு, இச்செயலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்துகிறது.

அனைத்துக்கட்சித் தலைவர்களின் பாராட்டுக்குரிய நடவடிக்கை

மதுரை மாநகர் மாவட்ட காவல்துறை யின் இந்நடவடிக்கைகள், மதவெறி யர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான கெடு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இந்நிலையில் பதற்றத்தை உருவாக்க முனைந்துள்ள மதவெறி சக்திகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநி லக்குழு பாராட்டுகிறது. மேலும், மத வெறி சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து மக்கள் ஒற்றுமையையும், அனைத்துப் பகுதி மக்களின் வழிபாட்டு உரிமையையும் பாதுகாக்க அனைத்து கட்சிகளும், திருப்பரங்குன்றத்தின் அனைத்துப்பகுதி மக்களும் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

அதேபோல, திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டு மதமோதலை ஏற்படுத்திட தீய நடவடிக்கைகளில் ஈடுபடுகிற ஆர்.எஸ்.எஸ். மற்றும் மதவெறி அமைப்புகளின் முயற்சிகளை முறியடித்திட வேண்டு மெனவும், காலம் காலமாக பின்பற்றி வரும் சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையை பாதுகாத்திட வேண்டு மெனவும், உடனடியாக காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் வழிப்பாதையை திறக்க வேண்டுமென்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.