tamilnadu

துவங்கிய முதல் நாளிலேயே நாடாளுமன்றம் முடங்கியது எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க மோடி அரசு மறுப்பு

துவங்கிய முதல் நாளிலேயே நாடாளுமன்றம் முடங்கியது எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க மோடி அரசு மறுப்பு

புதுதில்லி, டிச. 1 - நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் திங்களன்று கூடிய நிலையில், அவசர கதியிலான எஸ்ஐஆர் திருத்தம், நெல் ஈரப்பத உயர்வுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட விவ காரங்களை விவாதிக்க மறுத்து விட்டது. இதனால், நாடாளுமன்றம் துவங்கிய முதல் நாளிலேயே முடங்கியது. காலை 11 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும், மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கேள்வி நேரம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தம், அவ சர கதியில் நடத்தப்படுவதால், கோடிக் கணக்கான மக்களின் வாக்குரிமைப் பறிபோகும் அபாயம் உள்ள தால், அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் ஒத்தி வைப்பு நோட்டீஸ் அளித்து வலி யுறுத்தினர். சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி வழங்காத நிலையில், முழக் கங்களை எழுப்பி போராட்டம் நடத்தி னர். இதனால், முதலில் 12 மணி வரை யும், பின்னர் 2 மணி வரையும் ஒத்தி வைக்கப்பட்ட மக்களவை, தொடர்ந்து நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வளவு களேபரங்களுக்கு இடையிலும், அவை 12 மணிக்கு கூடிய போது, புகையிலை மற்றும் அது தொடர்புடைய பொருட்களுக்கு கலால் வரி விதிக்க வகை செய்யும் மத்திய கலால் (திருத்தம்) மசோதா 2025, பான் மசாலா போன்ற பொருட் களின் உற்பத்திக்கு செஸ் விதிப்ப தற்கான சுகாதார பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் மசோதா 2025, மணிப்பூர் ஜிஎஸ்டி 2017-ஐ திருத்து வதற்காக மணிப்பூர் ஜிஎஸ்டி (இரண்டாவது திருத்தம்) திருத்த மசோதா 2025 ஆகிய 3 மசோதாக்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார். அத்துடன், நடப்பு கூட்டத் தொடரில் காப்பீட்டுத் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதற்கான மசோதா கொண்டு வரப்படும் என்றும் அறிவித்தார். சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வரவேற்பு மாநிலங்களவையானது, அதன்  புதிய தலைவர் சி.பி. ராதாகிருஷ் ணன் தலைமையில் கூடிய நிலையில், புதிய மாநிலங்களவை உறுப்பினர் கள் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை வர வேற்று பிரதமர் மோடி மற்றும் அவை  துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மற்றும் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் உரை யாற்றினர். பிரதமர் மோடி பேசுகையில், புதிய அவைத்தலைவர் சி.பி. ராதா கிருஷ்ணன் பாஜக-வைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு பேசியிருந்த நிலை யில், எதிர்க்கட்சித் தலைவர்கள் மல்லி கார்ஜூன கார்கே பேசுகையில், பதிலடி கொடுத்தார். “உங்களுக்கு முன்னதாக மாநிலங்களவைத் தலைவர் பதவியில் இருந்து எதிர்பாராத விதமாகவும், திடீரெனவும் வெளியேறிய ஜகதீப் தன்கரை வழியனுப்பும் வாய்ப்பு அவைக்கு கிடைக்காமல் போனது  வருத்தமளிக்கிறது. மாநிலங்கள வைத் தலைவர் என்பவர் அவையின் பாதுகாவலர். அவர் அரசாங்கத்துக்கு மட்டுமல்ல, எதிர்க் கட்சிகளுக்கும் சொந்தமானவர்.  1952 மே 16 அன்று, அன்றைய மாநி லங்களவைத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பேசுகையில், “நான் எந்தக் கட்சியையும் சேர்ந்த வன் அல்ல” என்று கூறினார். எதிர்க் கட்சிகளை அரசாங்கத்தின் கொள்கை களை நியாயமாகவும், சுதந்திர மாகவும், வெளிப்படையாகவும் விமர்சிக்க அனுமதிக்காவிட்டால், ஒரு ஜனநாயகம் ஒரு கொடுங் கோன்மையாகச் சீரழிந்துவிடும் என்றும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நீங்கள் குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர் என்று பலர்  கூறுவதாலேயே இதைச் சொல்கி றேன். நீங்கள் பாரபட்சமற்றவராக இருப்பீர்கள், எதிர்க்கட்சியையும் சமமாக நடத்துவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார். இத னால் மாநிலங்களவையில் பாஜக எம்.பி.க்கள் சலசலப்பில் ஈடுபட்டனர்.