states

எஸ்ஐஆர் அடாவடியை கண்டித்து மேற்கு வங்கத்தில்  பிஎல்ஓ-க்கள் போராட்டம்

எஸ்ஐஆர் அடாவடியை கண்டித்து மேற்கு வங்கத்தில்  பிஎல்ஓ-க்கள் போராட்டம்

பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், குஜராத் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. பயிற்சி மற்றும் திட்டமில்லா மல் குறுகிய காலத்தில் முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ள இந்த எஸ்ஐஆர் பணியால் வாக்குச்சாவடி நிலை ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எஸ்ஐஆர் பணி அழுத்தம் காரணமாக 12 மாநிலங்களில் இதுவரை 30க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தற்கொலை மற்றும் மார டைப்பால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்ச மாக மேற்கு வங்கத்தில் 20க்கும் மேற் பட்ட அரசு ஊழியர்கள் பலியாகி யுள்ளனர். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ள பிஎல்ஓ- க்கள்,“எங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அன்றாடப் பணியைக் கூட செய்ய முடியவில்லை” என்று கூறி, திங்களன்று  அம்மாநில தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது ஒன்றிய மோடி அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக முழக்கங்க ளை எழுப்பினர். குறிப்பாக போராட் டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் ஒருவர் செய்தியாளரிடம் பேசுகையில், “எஸ்ஐஆர் பணி மிகுந்த அழுத்தம் உடையது. குறுகிய காலத்தில் முடிக்க முடியாது. எஸ்ஐஆர் செயல்முறை காரணமாக நாங்கள் மனிதாபிமானமற்ற மன அழுத்தத்தை எதிர்கொள்கிறோம்” என அவர் குற்றம்சாட்டினார்.