கேரள அமைச்சர் வி.சிவன்குட்டி
இந்திய ஒலிம்பிக் சங்க ஆவணங்களில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தின் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஒலிம்பிக் விளையாட்டுகளை திருவனந்தபுரத்திற்கு கொண்டு வருவதாக பாஜகவின் ராஜீவ் சந்திரசேகர் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார். ஏமாற்று வேலையெல்லாம் கேரளாவில் எடுபடாது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
எஸ்ஐஆர், காற்று மாசுபாடு ஆகியவை மிகப்பெரிய பிரச்சனைகள். அவற்றைப் பற்றி விவாதிப்போம். நாடாளுமன்றம் எதற்காக? அவற்றைப் பற்றி விவாதிக்கத்தான் இருக்கிறது. பொதுமக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுவது, கேள்வி எழுப்புவது, விவாதிப்பது மிக முக்கியமானவை ஆகும். ஆனால் இவை நாடகம் அல்ல.
ஏஐயூடிஎப் எம்எல்ஏ ஹபிஸ் இஸ்லாம்
தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் பணி அசாமிற்கும் வரும். அசாம் மாநிலத்தில் எந்தவொரு உண்மையான குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படக்கூடாது. நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளையும் எஸ்ஐஆர் செயல்முறையை கவனமாக கண்காணிக்க வேண்டும்.
திமுக எம்.பி., கனிமொழி சோமு
நடப்பாண்டு குளிர்கால கூட்டத் தொடர் மிகவும் குறுகியது. வெறும் 15 வேலை நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. இதில் மசோதாக்கள் விவாதிக்கவே வேலை நாட்கள் சரி ஆகிடும் என்றால், எஸ்ஐஆர் விவாதத்திற்கு எப்போது நேரம் கிடைக்கும்?
