states

பீகாரில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

பீகாரில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு சமீ பத்தில் தேர்தல் நடை பெற்றது. இதில், ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி யை கைப்பற்றியது. பீகார் முதல மைச்சராக நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதா தளம்) நவம்பர் 20 அன்று பதவியேற்றார். பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா துணை முதலமைச்சர்களாக மீண்டும் பதவியேற்றனர்.  இந்நிலையில், தேர்தலுக்குப் பின் பீகார் சட்டமன்றம் திங்களன்று கூடியது. இந்த கூட்டத்தொடர் வரும் வெள்ளிக் கிழமை வரை நடைபெற உள்ளது. சட்ட மன்றம் கூடியதும் தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபா நாயகர் நரேந்திர நாராயணன் (ஐக்கிய ஜனதா தளம்) பதவி பிரமா ணம் செய்து வைத்தார். தொடர்ந்து இந்த கூட்டத்தொடரில் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். சபாநாய கருக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.