இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிபரத்தை நம்பமுடியாது
மோடி அரசுக்கு அதிர்ச்சி அளித்த சர்வதேச நாணய நிதியம்
புதுதில்லி ஒன்றிய புள்ளியியல் அமைச்சகம் கடந்த வாரம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான புள்ளி விபரத்தை வெளியிட்டது. அதில், இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் அபார வளர்ச்சி கண்டுள்ளது. 2025-26 நிதி யாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியா வின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 8.2% உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விடவும், முந்தைய காலாண்டையும் விடவும் மிக அதிகம் ஆகும். அமெரிக்காவின் வரிகள் போன்ற சவால்களையும் தாண்டி இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது என கூறப்பட்டுள் ளது. பிரதமர் மோடி,”இந்த வளர்ச்சி விகிதம் மிகவும் ஊக்கமளிக்கிறது. இந்திய மக்களின் கடின உழைப்பு மற்றும் தொழில் முனைப்புக்கு பாராட்டு” என பெருமிதமாகக் கூறினார். இந்நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) புள்ளி விபரத்தை நம்ப முடியாது என சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்தியா குறித்த அதன் வருடாந்திர “கட்டுரை IV” அறிக்கையை வெளியிட்டது. இந்தக் கட்டுரையில் இந்தியாவின் தேசிய கணக்குகளு க்கு (ஜிடிபி, ஜிவிஏ மற்றும் தொடர்புடைய எண் களை உருவாக்கும் அமைப்பு) ஒட்டுமொத்த மாக “சி (மூன்றாம் தரம்)” தரத்தை வழங்கி யுள்ளது. இதுதொடர்பாக அக்கட்டுரையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான புள்ளிவிவ ரங்கள் நம்பகமானவை அல்ல. இந்திய அரசு பொருளாதாரச் சோதனையில் அரிதாகவே தேர்ச்சி பெற்றுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை அறிவிக்கும் போது தகவல் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. சிறு கடைக் காரர்கள், வியாபாரிகள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. எனவே, மொத்த உள் நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரத்தை நம்ப முடியாது. இந்தியாவின் பொருளாதார அறிவிப்பு வெறும் தற்காலிகம் தான். நிரந்த ரம் அல்ல. தற்போது வெளியாகியுள்ள இந்தியா வின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான புள்ளிவிபரத்திற்கு “பி” கிரேடு வழங்குகிறோம் என சர்வதேச நாணய நிதியம் “கட்டுரை IV” அறிக்கையில் கூறியுள்ளது.
