ஜிஎஸ்டி வசூல் ரூ.1.70 லட்சம் கோடி
நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் நிலவரத்தை ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.1.69 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் ரூ.1.70 லட்சம் கோடி யாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 0.7% அதிகம் ஆகும். அதே போல மொத்த உள்நாட்டு வரு வாய் 2.3% குறைந்து ரூ.1.24 லட்சம் கோடி யாக உள்ளது. செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்த 375 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. பொருட்களின் இறக்குமதியிலிருந்து கிடைக்கும் வருவாய் நவம்பரில் 10.2% அதிகரித்து ரூ.45,976 கோடியாக உள்ளது” என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.