உடனடி கணக்கெடுப்புக்கு முதலமைச்சர் உத்தரவு!
சென்னை, டிச. 1 - டிட்வா புயல் பாதிப்பு தொடர்பாக காவிரி பாசனப் பகுதி (டெல்டா) மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வேளாண் அதி காரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்கட்கிழமையன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, பயிர்ச் சேதங்கள் குறித்து உடனடியாக கணக்கெடுப்பு மேற் கொள்ளவும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். வேளாண் பயிர்கள், குறிப்பாக நெற்பயிர் சேதம், இதர பயிர்கள் சேதம் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் குறித்து கணக்கெடுப்பு பணிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும். மேலும், கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர்ப் பாதிப்பு களுக்கான கணக்கெடுப்பு பணிகள் முடி வடைந்து, 33 சதவிகிதத்திற்கும் மேல் பாதிப்பைச் சந்தித்துள்ள 4,235 ஹெக்டேர் வேளாண் பயிர்களுக்கும், 345 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.