tamilnadu

img

டெல்டா மாவட்டங்களில் ‘டிட்வா’ புயலால் பெரும் பாதிப்பு சம்பா, தாளடிப் பயிர்கள் முற்றாக நாசம்

டெல்டா மாவட்டங்களில் ‘டிட்வா’ புயலால் பெரும் பாதிப்பு சம்பா, தாளடிப் பயிர்கள் முற்றாக நாசம்

விவசாயிகள் சங்கம், சிபிஎம் தலைவர்கள் நேரில் ஆய்வு;  ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

திருவாரூர்/நாகப்பட்டினம், டிச. 1: காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் வங்கக் கடலில் உருவான ‘டிட்வா’ புயல் காரணமாக கடந்த  நான்கு நாட்களாக விடாமல் பெய்த தொடர் கன மழையால் சுமார் மூன்று லட்சம் ஏக்கருக்கும் அதிகமான சம்பா மற்றும் தாளடிப் பயிர்கள்  முழுமையாகத் தண்ணீரில் மூழ்கி கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தி யிலும் 30 முதல் 40 நாட்கள் வரை இரவு பக லாகப் பாடுபட்டுப் பாதுகாத்து வந்த பயிர்கள், கடல் போல் காட்சியளிக்கும் வயல்களில் நீரில் மூழ்கி அழுகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் விவசாயிகளின் துயரத்தைத் துடைக்க,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சிபிஎம் தலைவர்கள் குழுவாகச் சென்று பாதிக்கப் பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். தலைவர்களின் கள ஆய்வு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன், மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன், மாநிலப் பொரு ளாளர் கே.பி.பெருமாள் ஆகியோர் அடங்கிய குழுவினர், டிசம்பர் 1 - திங்களன்று திரு வாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் ஒன்றியத்தில் கோட்டூர், இருள் நீக்கி, குறிஞ்சி மூலை, முத்துப்பேட்டையில் மருதவானம், குன்னியூர், திருத்துறைப்பூண்டி நகரத்தில் சிங்களாந்தி, ஆலத்தம்பாடி, கச்சனம் உள்ளிட்ட  பகுதிகளில் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை யில் உள்ள சுமார் 40,000 ஏக்கர் பயிர்களைப் பார்வையிட்டனர். இவர்களுடன், சிபிஎம் மாவட்ட செயலாளர் டி. முருகையன், விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் என். கண்ணன், திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ். தம்பு சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்ட த்தின் கீழையூர் ஒன்றியம் மகிழி, இறையான் குடி, நாகப்பட்டினம் ஒன்றியம் செம்பியன்மா தேவி, ஆவராணி உள்ளிட்ட பல்வேறு பகுதி களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு, ஒரு மாதம் வயதுடைய நடவுப் பயிர்கள் சேத மடைந்ததுடன், பத்து முதல் பதினைந்து நாட்களு க்கு முன்னர் நேரடி விதைப்பு செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விதை கள் முளைக்காமலும், முளைத்த நாற்றுகள் சேத மடைந்தும் உள்ளதாகத் தலைவர்கள் தெரிவித்த னர். இந்த ஆய்வில், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் வி. மாரிமுத்து, கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி, விவசாயிகள் சங் கத்தின் மாநிலத் துணைத் தலைவர் வி. சுப்பிர மணியன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூறிய தலைவர்கள், கடந்த மாதத்தில் அறுவடை செய்யப்பட்ட குறுவைப் பயிர்களுக்கான நிவா ரணமே வழங்கப்படாத சூழ்நிலையில், மீண்டும் தற்போது பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் திக்கற்ற நிலையில் உள்ளனர் என வேதனை தெரிவித்தனர். நீதிராஜன், ஏ.டி. அன்பழகன்