tamilnadu

img

இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடிய பாகிஸ்தான் ரசிகர்கள்

இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடிய பாகிஸ்தான் ரசிகர்கள்

மினி உலகக்கோப்பையின் 5ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. ஞாயிறன்று துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மூத்த வீரர் விராட் கோலியின் (100) அசத்தலான சதம் மற்றும் குல்தீப் யாதவின் (3 விக்.,) அபார பந்துவீச்சால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை வலுவான அளவில் தக்க வைத்துள்ளது இந்தியா. ஆனால் போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தான் மினி உலகக்கோப்பையிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவங்கள் அனைத்தும் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் சகோதரத்துவத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன. அதனை பற்றி பார்க்கலாம்:

இந்தியா - பாகிஸ்தானை இணைத்த கோலி

பாகிஸ்தான் தோல்வியை தழுவினாலும் கோலி சதம் அடித்ததை அந்நாட்டு ரசிகர்கள் துபாய் மைதானத்தில் வெறித்தனமாக கொண்டாடினார்கள். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. அதில் பாகிஸ்தான் ரசிகர்கள் விராட் கோலி ஆட்டத்தை பார்த்து கொண்டாடி யதும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து, கோலி பார்முக்கு திரும்பியதை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ சேர் செய்த கிரிக்கெட் ரசிகர்கள்,”இந்தியா - பாகிஸ்தான் என பிரிந்திருக்கும் இரண்டு நாட்டை விராட் கோலி என ஒற்றை மனிதர் இணைத்து விட்டார்” என கருத்து தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டிலும் கொண்டாட்டம்

சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஒளிபரப்பியது போல பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தியா - பாகிஸ்தான் நாட்டின் போட்டி நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. தங்கள் நாட்டு வீரர்கள் தோற்றாலும், இந்திய அணியின் வெற்றியை பண்டிகை போல பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அந்நாட்டின் பெரும்பாலான இடங்களில் பட்டாசு சத்தங்களும் ஒலித்தன.

பச்சை ஜெர்சியில் விராட் கோலியின் பெயர்

துபாய் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் 60%க்கும் அதிகமான அளவில் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் ஜெர்ஸியில் விராட் கோலியின் பெயரை அச்சடித்து இருந்தனர். இது கோலி மீதான பாகிஸ்தான் ரசிகர்களின் அன்பை வெளிப்படுத்துவதாக இருந்தது.

ஜெர்சியை மாற்றிய பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள்

துபாய் மைதானத்தில் கோலி - ஷெராயாஸ் நங்கூரம் அமைக்க தங்கள் நாடு தோற்பது உறுதி என்பதை உணர்ந்த பாகிஸ்தான் ரசிகர்கள், ஆட்டத்தின் பாதிக்கட்டத்திற்கு மேல் இந்திய  அணியின் ஜெர்சியை மாற்றிக் கொண்டனர். அவர்களும் எங்கள் சகோதரர் தான் எனக் கூறி இந்திய அணியின் வெற்றியை கொண்டாடினார்கள்.

எல்லாம் தமிழர்களின் கைவண்ணம்

1999ஆம் ஆண்டு சென்னையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடின. இந்த போட்டி யில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்திய
அணி தோற்றாலும், பாகி ஸ்தான் அணியின் அபார ஆட்டத்தை சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று, கைதட்டி பாராட்டினர். இதனை கண்டு பாகிஸ்தான் நாட்டு வீரர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உல
கமே ஆச்சர்யமடைந்தது. அதாவது இது உலகத்திற்கே ஒரு முன்னுதாரணமான சம்பவமாக இருந்தது. தற்போது தமிழர்களின் அதே செயல்பாட்டை பாகிஸ்தான் நாட்டு ரசிகர்களும் இந்திய வீரர்களுக்கு  ஆதரவு அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் வீரரை பாராட்டிய கோலி அதிர்ந்த துபாய் மைதானம்

ஒரே ஒரு விக்கெட் எடுத்தாலும் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் அப்ரார் அகமது இந்திய பேட்டர்களை திணறடித்தார். குறிப்பாக அப்ரார் அகமதுவின் அசத்தலான சூழலை கண்டு ஆச்சரியமடைந்த விராட் கோலி,”நன்றாக பந்து வீசுகிறீர்கள்” என கைகொடுத்து பாராட்டினார். அப்பொழுது துபாய் மைதானத்தில் குழுமியிருந்த இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள் ஒன்றாக கரகோஷம் எழுப்பினர். இதனால் துபாய் மைதானமே குலுங்கியது.

ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

கிரிக்கெட் உலகில் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 9ஆவது சீசன் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும்) நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா (குரூப் பி) அணிகள் மோதுகின்றன. 

 

நிர்வாகத்தைப் போலவே வீரர்களும் அறியாமையில் உள்ளனர் :

பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் குற்றச்சாட்டு

“இந்தியாவிடம் தோல்வியடைந்தது என்னை மிகவும் ஏமாற்றமடைய செய்துள்ளது. மற்ற நாடுகள் பந்துவீச்சாளர்களுடன் விளையாடுகிறது. ஆனால் பாகிஸ்தான் 5 பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுக்க திணறி வருகிறது. இது வெறும் மூளையற்ற மற்றும் அறிவற்ற மேலாண்மை செயல்பாடு ஆகும். ஆனாலும் நம் குழந்தைகளை (பாகிஸ்தான் வீரர்களை) குறை சொல்ல முடியாது. அணி நிர்வாகத்தைப் போலவே வீரர்களும் அறியாமையில் உள்ளனர். என்ன செய்வது என்று தெரியாமல் வீரர்கள் விழித்து வருகின்றனர்” என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறினார்.