எதிர்க்கட்சிகள் போராட்டம்; மக்களவை ஒத்திவைப்பு
நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்ட முயல்வதா!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட் டத்தை முடக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சிப்பதாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இதனால், மக்களவை முற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. செவ்வாயன்று காலை மக்க ளவை கூடியதும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட் டத்தின் கீழ் 100 நாள்கள் பணி செய்ப வர்களுக்கு சரியான நேரத்தில் ஊதி யம் வழங்கப்படுவதில்லை; இது குறித்த பிரச்சனையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை இணைய மைச்சர் பெம்மாசானி சந்திர சேகர், “இந்த ஆண்டு ஊரக வேலையு றுதித் திட்டத்திற்கு (MGNREGS) ரூ. 86 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள் ளது, அதில், ரூ. 85 ஆயிரம் கோடி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தைப் பொறுத்த வரை, ரூ. 5.7 கோடி மதிப்புள்ள பணி களில் முரண்பாடுகள் கண்டறி யப்பட்டன. இதுதொடர்பாக, மாநில அரசு தெளிவுபடுத்தியவுடன், மீத முள்ள நிதி விடுவிக்கப்படும்” என்றார்.
விவசாயத் தொழிலாளர்களின் நுகர்வோர் விலைகளுக்கு ஏற்ப கூலி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட் டத்தின் கீழ் கேரளம் இரண்டாவது அதிகபட்ச கூலியாக ரூ. 350ஐ பெற் றது என்றும் குறிப்பிட்டார். எனினும், ஊதியம் வழங்குவது 15 நாள்களுக்கு மேல் தாமதமாகி விட்டால், அவர்களுக்கு வட்டியுடன் கூடிய ஊதியம் வழங்கப்பட வேண் டும் என்ற நிலையில், அதுகுறித்து அமைச்சர் எந்த பதிலும் அளிக்கா ததால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொட ர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இத னால், மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.