மராத்தா சமூகத்தினருக்கு குன்பி சான்றிதழ் வழங்க எதிர்ப்பு மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக ஓபிசி சமூகத்தினர் பிரம்மாண்ட போராட்டம்
மனோஜ் ஜாரங்கேவின் (மராத்தா ஆர்வலர்) தொடர் போராட்டத்தால் மகாரா ஷ்டிரா பாஜக கூட்டணி அரசு சமீபத்தில் மராத்தா சமூகத்தின ருக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது. ஓபிசி (OBC) பிரிவின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக, குன்பி (Kunbi) சாதி சான்றிதழ்களை வழங்க ஒப்புக்கொண்டு அரசா ணை வெளியிட்டது மகாராஷ்டிரா அரசு. குன்பி என்பது ஏற்கனவே ஓபிசி பிரிவில் உள்ள விவசாய சமூகமாகும். இந்நிலையில், மகாராஷ்டிரா அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் வியாழக் கிழமை அன்று ஓபிசி சமூகத்தி னர் பெரிய அளவில் போராட்டத் தில் ஈடுபட்டனர். ஆசாத் மைதா னத்தில் ஓபிசி ஆர்வலர் லட்சுமண் ஹகே தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது, மராத்தா சமூகத்தினருக்கு குன்பி பிரிவின் கீழ் ஓபிசி சான்றிதழ் வழங்கினால், தற்போதுள்ள ஓபிசி இடஒதுக்கீடு பாதிக்கப்படும் என லட்சுமண் ஹகே உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். மேலும் பல்லாயிரக்கண க்கானோர் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட போராட்டத்தில் மகா ராஷ்டிரா பாஜக கூட்டணி அர சுக்கு எதிராக ஓபிசி சமூகத்தினர் முழக்கங்களை எழுப்பினர்.
பாஜக கூட்டணிக்கு சிக்கல்
உச்சநீதிமன்ற கெடு காரண மாக மகாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மனோஜ் ஜாரங்கேயின் போராட்டம் தங்கள் கூட்டணிக்கு சேதாரத்தை ஏற்படுத் தும் என்பதை உணர்ந்த மகாராஷ் டிரா பாஜக அரசு ஓபிசி (OBC) பிரி வின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது. இதன் மூலம் மராத்தா சமூகத்தினரின் வாக்குகள் தங்கள் பக்கம் திரும்பும் என்பதே பாஜக கூட்டணி அரசின் கணக்கு. ஆனால் மராத்தா சமூ கத்தினருக்கு எப்படி ஓபிசி பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்கலாம்? என ஓபிசி சமூகத்தினர் போராட்டத் த்தில் இறங்கியுள்ளனர். இது மகாராஷ்டிரா பாஜக கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.