பொதுமக்கள் நிலம் தொடர்பான மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கும், நில ஆவணங்களை எளிதாக பெறுவதற்கும் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதளத்தில் புதிய வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகிய வற்றுடன் சர்வே விவரங்களை கொடுத்து விட்டால், பட்டாவுடன் அதன் கீழ் வரைபடமும் ஒருசேர பதிவிறக்கம் செய்யும் வசதி விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான சோதனை முயற்சி வெற்றிகரமாக நடைபெற்றதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.