ஸ்கேன் இந்தியா
அடுத்தது தில்லி..? 2025இல் ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 31 வரை யில் 45 ஆயிரம் புகார்கள் தில்லி மக்களால் தரப்பட்டுள்ளன. இவை குடிநீர் மாசுபட்டு வருகிறது என்பதைப் பற்றிய புகார்க ளாகும். யமுனை நதியின் இருபக்கமும் இருக்கக்கூடிய பகுதிகளில் இருந்துதான் அதிகமான புகார்கள் வந்தன. இந்தியாவில் அதிக தூய்மையான நகரம் என்று இந்தூரைச் சொன்னார்கள். 23 பேர் வரையில் மாசுபட்ட குடிநீரைக் குடித்து, வயிற்றுப்போக்கால் அங்கு உயிரிழந்தி ருக்கிறார்கள். தில்லியிலும் தொடர்ந்து புகார்கள் வரும் நிலையில், மற்றொரு இந்தூராக மாறிவிடக்கூடாது என்று மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 30, 40 ஆண்டுக ளுக்கு முன்பு போட்ட குடிநீர்க் குழாய்கள் மாற்றப்படாம லேயே இருப்பதுதான் பிரச்சனை. உடனடியாக நடவ டிக்கை எடுப்போம் என்று தில்லி அரசு சொன்னாலும், எந்தவிதத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. முழுமை யான நிர்வாகத்தைத் தங்கள் கையில் வைத்திருக்கும் ஒன்றிய அரசு, வாயே திறக்கவில்லை. குழி பறிப்பா..? மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச் சரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரு மான திக்விஜய் சிங், மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். இளம் முகங்களுக்கு வாய்ப்புகள் தரப்பட வேண்டும் என்று காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. இது தெரிந்துதான் திக்விஜய் சிங் இப்படிச் சொன்னாராம். அது மட்டுமல்ல, ஏற்கெனவே உயர்மட்ட செயற்குழுக் கூட்டம் நடக்கையி லும் ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பாராட்டிப் பேசி தலை மையைச் சீண்டினார். நல்ல வலுவாக காங்கிரஸ் இருந்த மத்தியப் பிரதேச மாநிலத்தில் மென்மையான இந்துத்து வாவைக் கடைப்பிடிக்கிறேன் என்ற தவறான இவரது உத்திதான் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவை அதி காரத்தில் இருக்க வைத்துள்ளது. இவ்வளவு நாட்கள் பொறுப்பில் இருந்துவிட்டு, தற்போது அது கைநழுவு வதால் குழி பறிக்கிறார் என்கிறார்கள் மாநிலத் தலை வர்களில் சிலர். சும்மாக்காச்சும்.. மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்களில் ஆங்காங்கே முரண்டு பிடிக்கும் கூட்டணிக் கட்சிகளை வழிக்குக் கொண்டு வர பாஜக, ரெய்டு நடவடிக்கையைக் கையில் எடுத்திருக்கிறது. அம்பர்நாத் என்ற நகராட்சியில் ஷிண்டேயின் சிவசேனா வைக் கவிழ்க்க காங்கிரசின் 12 கவுன்சிலர்களை பாஜக விலைக்கு வாங்கியது. அஜித் பவார் கட்சிக்கு துணைத் தலைவர் என்று ஆசை காட்டியது. ஆனால் தரவில்லை. இதனால், ஷிண்டே ஆதரவு கவுன்சிலர்களுடன் இணை ந்து நகராட்சியில் பெரும்பான்மை பெற்றனர். இரண்டு இடங்களில் சரத் பவாரோடு கைகோர்த்திருக்கிறார்கள். இதனால், அக்கட்சியின் அரசியல் பிரச்சாரத்தை மேற் பார்வை செய்யும் நிறுவனத்தின் மீது ரெய்டு நடத்தியுள் ளார்கள். அஜித் பவாரின் எதிர்ப்பால், ரெய்டு எல்லாம் இல்லை. சும்மா விசாரிக்கத்தான் சென்றோம் என்றிருக்கி றார்கள். ஆமாம்... சும்மா மிரட்டத்தானே சென்றார்கள் என்று எதிர்க்கட்சியினர் கிண்டலடிக்கிறார்கள். குளத்தைக் காணோம்.. குளத்தைக் காணோம்.. என்பது ஆரவல்லிப் பகுதிகளில் மக்களின் கதறலாக இருக்கிறது. ஏழு பெரிய குளங்களை மக்கள் இழந்திருக்கி றார்கள். நில ஆக்கிரமிப்பே இதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. அது மட்டுமல்ல, இப்பகுதிகளில் உள்ள காடு களை நம்பித்தான் பெருவாரியான மக்கள் வாழ்கிறார் கள். அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்று வதே அந்தக் காடுகள்தான். குளங்கள் மறைவதால், காடுக ளும் சுருங்குகின்றன. இந்நிலையில்தான் ஆரவல்லி மலைத்தொடரை ஒட்டுமொத்தமாகக் காலி செய்யும் திட்டமாக கனிமச் சுரங்களுக்கான அனுமதி வருகிறது. முதலில் மறுத்த நீதிமன்றமும் தற்போது தலையாட்டி விட்டது. ஆனால் மக்களின் எழுச்சிகரமான போராட் டங்கள் ஒன்றிய, மாநில அரசுகளை பின்வாங்க வைத்துள்ளது.