புதிய வால்வோ குளிர்சாதன பேருந்துகள் இயக்கம் தொடங்கியது
சென்னை, டிச. 25 - அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 130 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 110 பேருந்துகள் குளிர் சாதன வசதியில்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்டவை. மீதமுள்ள 20 பேருந்துகள் குளிர்சா தன இருக்கை வசதி கொண்ட வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள். சென்னை தீவுத்திட லில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த 20 அதிநவீன வால்வோ குளிர் சாதன சொகுசுப் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொ டங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகர் கோவில், திருச்செந்தூர், திருப்பூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. கட்டண விவரம்: சென்னை - நாகர்கோவில் ரூ. 1,215, சென்னை - திருச்செந்தூர் ரூ.1,115, சென்னை - திரு நெல்வேலி ரூ. 1,080, சென்னை - கோவை ரூ. 880, சென்னை - திருப்பூர் ரூ. 800, சென்னை - மதுரை ரூ. 790, கோவை - பெங்களூரு ரூ. 770, சென்னை - பெங்களூரு ரூ. 735, சென்னை - சேலம் ரூ. 575, சென்னை - திருச்சி ரூ. 565 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது.