கருஞ்சிறுத்தை குட்டி உயிரிழப்பு
கோவை, டிச.25- மருதமலை அருகே மீட்கப்பட்ட தாயை பிரிந்த கருஞ் சிறுத்தை குட்டி உயிரிழந்தது. கோவை மருதமலை வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிக்குள் புதனன்று காலை கருஞ்சிறுத்தை குட்டி ஒன்று சுற் றித் திரிந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் வனத்துறை யினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் சுமார் 7 மாத கருஞ்சிறுத்தை குட்டியை மீட்டு தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக சிறுத்தைகள் வழக்கமாக நடமாடும் மருதமலை வனப்பகுதி யில் உள்ள குகை போன்ற இடத்தில் குட்டியை விட்டு கண் காணிப்பு கேமராக்களை பொருத்தி வனத்துறை ஊழியர்கள் கண்காணித்தனர். இந்நிலையில் வியாழனன்று அதிகாலை ஊழியர்கள் சென்று பார்த்த போது, குகையில் சிறுத்தை குட்டி இல்லாமல் இருந்து தெரியவந்தது. இதையடுத்து வன ஊழி யர்கள் தாயுடன் குட்டி சேர்ந்து விட்டதா என கண்டறிய கண் காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது இரண்டு சிறுத்தை கள் அங்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து வனப் பகுதிக்குள் சென்று பார்த்த போது குட்டி விடப்பட்ட இடத் திற்கு 300 மீட்டர் தொலைவில் கருஞ்சிறுத்தை குட்டி இறந்த நிலையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து குட்டியின் உடலை மீட்ட வனத்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக எடுத்து வந்தனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் சிறுத்தை குட்டிக்கு உடற்கூராய்வு மேற்கொண்டனர்.
