வெண்மணி தியாகிகளை நெஞ்சில் ஏந்துவோம்!
சேலம், டிச.25- வெண்மணி தியாகிகளின் 57 ஆம் ஆண்டு நினைவுதினம் வியாழனன்று அனுசரிக்கப்பட்டது. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட கீழ் வெண்மணி கிராமத்தில், தங்களை தலை நிமிரச்செய்த செங்கொடியை பாதுகாக்கவும், கூலி உயர்வு கேட்ட தற்கும், 44 உழைக்கும் மக்கள் உயிரு டன் எரித்துக் கொல்லப்பட்டனர். தியாக வெண்மணியின் 57 ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் வியாழ னன்று அனுசரிக்கப்பட்டது. சேலம் மெய்யனூர் போக்குவரத்து பணிமனை முன்பு உள்ள வெண்மணி தியாகிகள் நினைவு தூணுக்கு சிஐடியு சேலம் மாவட்டக்குழு சார்பில் அஞ்சலி செலுத் தப்பட்டது. சிஐடியு சாலை போக்குவ ரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்டச் செய லாளர் ஏ.கோவிந்தன், சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆர்.வெங்கடாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், எழுமாத்தூர் அண்ணா நகர் பகுதியில் விவசாயத் தொழிலாளர் சங் கம் சார்பில், நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராக வன், தாலுகா செயலாளர் டி.தங்கவேல், சிபிஎம் தாலுகா செயலாளர் எம்.சசி, மாணவர் சங்க நிர்வாகி சேகுவேரா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊனாத்திபுதூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விதொச மாவட்டக்குழு உறுப்பினர் கே.நர்மதா உட்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் திருப்பூர் மாவட்டம், தென்னம்பா ளையத்தில் நடைபெற்ற நினைவேந் தல் நிகழ்ச்சிக்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் பா.ஞான சேகர் தலைமை வகித்தார். சிபிஎம் தெற்கு மாநகரச் செயலாளர் த.ஜெய பால், சிஐடியு மாவட்ட துணைத்தலை வர் கே.உண்ணிகிருஷ்ணன், கட்டுமான சங்க மாவட்டப் பொருளாளர் ப. ரமேஷ், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் டி.வி.சுகுமார், வாலி பர் சங்க தெற்கு மாநகரச் செயலா ளர் மெளனிஸ் கண்ணன், தமுஎகச தெற்கு கிளைச் செயலாளர் சி.கிருஷ் ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், நா.சஞ்சீவன் நன்றி கூறினார். ஊத்துக்குளியில் அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் வெண்மணி தியாகிகள் நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது. புதுப்பாளை யம், அம்பேத்கர் நகர், நடுப்பட்டி, எம். தொட்டிபாளையம் ஆகிய கிளைகளில் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்நிகழ்வுகளில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்த சாமி, விதொச தாலுகா தலைவர் மணி யன், செயலாளர் க.பிரகாஷ், பொரு ளாளர் பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். தாராபுரம் வட்டாரத்தில் உபரி நிலம் அறிவிப்பு செய்து ஏழை மக்களுக்கு பட்டா வழங்கியும், நிலம் அளவை செய்து தரப்படவில்லை. ஏழை மக்க ளுக்கு உரிய பட்டாவை அளந்து தராமல் 50 ஆண்டுகளாக ஏமாற்றி வரும் அர சுத்துறை நிர்வாகத்தை கண்டித்து, ‘போராடுவோம் நிலம் பெறுவோம்’ என வெண்மணி நினைவு நாளில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. கொழுமம் குழி கிராமத்தில் நடைபெற்ற இந்த இயக்கத் திற்கு சிபிஎம் தாராபுரம் தாலுகா ஒருங்கி ணைப்பாளர் ஆர்.வெங்கட்ராமன் தலைமை ஏற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.கனக ராஜ், விடுதலை இயக்கத்தின் தலைவர் ச.கருப்பையா, ஆதித்தமிழர் ஜனநா யக பேரவை தலைவர் அ.சு.பௌத்தன், தமிழ் புலிகள் முகிலரசன் உள்ளிட்டோர் உரையாற்றினர். குடிமங்கலம் ஒன்றியம். புக்குளம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத் திற்கு, சிபிஎம் கிளைச் செயலாளர் மந்தி ரியப்பன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனக ராஜ், ஒன்றியச் செயலாளர் சசிகலா உட்பட பலர் கலந்து கொண்டனர். விவ சாயத் தொழிலாளர் சங்க மடத்துக் குளம் தாலுகா கமிட்டி சார்பில், சோழ மாதேவி ஊராட்சியில் வெண்மணி தியாகிகள் தின சிறப்புக்கூட்டம் சங்கத் தின் தலைவர் மாசாணம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஆறுமுகம், சிஐடியு தலைவர் பன்னீர் செல்வம் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர். கோவை பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் சார்பில், வெண்மணி தியாகிகள் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. சங் கத்தின் மாவட்டப் பொருளாளர் கே. மகாலிங்கம் தலைமை வகித்தார். இதில் தாலுகா செயலாளர் கே.ஏ.பட்டீஸ்வர மூர்த்தி, சிபிஎம் தாலுகா செயலாளர் மூ.அன்பரசன், குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் சரவணன், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ஸ்டாலின் பழனி சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, சிங்காநல்லூர் ஊராட்சி, பொள்ளாச்சி போக்குவரத்து பணி மனை உள்ளிட்ட பகுதிகளில் நடை பெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் சிஐ டியு தாலுகா ஒருங்கிணைப்பாளர் பரம சிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோன்று, கோவை செல்வ புரம் அருகே உள்ள சுந்தரம் வீதி பகுதி யில் கோயம்புத்தூர் தங்க நகை தொழி லாளர் யூனியன் சார்பில் வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட் டது. இதில் சங்கத்தின் ஸ்தாபகத் தலை வர்களில் ஒருவரான கோபால், பொதுச் செயலாளர் சந்திரன், துணைத்தலை வர் சம்பத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆனைமலையில் நடை பெற்ற கருத்தரங்கங்கிற்கு, விதொச தாலுகா தலைவர் ப.பழனிச்சாமி தலைமை வகித்தார். இதில் மாவட் டச் செயலாளர் ஏ.துரைசாமி, பொருளா ளர் கே.மகாலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர் சாந்தி முருகன், தாலுகா நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிபிஎம் வட்டச் செயலாளர் தி.வ.தனுசன், மூத்த தலைவர் சி.சொக்கலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
