சோழர் கால ‘நிரந்தர நில அளவுகோல்’ கண்டுபிடிப்பு!
உடுமலை, டிச.25- நில அளவீடுகளில் ஏற்படும் சிக்கல் களைத் தீர்க்க, 800 ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கையாண்ட வியக்கத்தக்க தொழில்நுட்பம் ஒன்று திருப்பூர் அருகே கண்டறியப்பட்டுள் ளது. திருப்பூர் மாவட்டம், கொமரலிங்கம் அமராவதி ஆற்றின் கரையில் அமைந் துள்ள சிதைந்த கரியபிரான் கோவிலை புதுப்பிக்கும் பணியின் போது, தொல் லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையிலான குழுவினர் அபூர்வ மான ‘நிரந்தர நில அளவுகோல்’ ஒன்றை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து நாரா யணமூர்த்தி கூறுகையில், கோவிலின் தென்பகுதி பட்டிகையில் பொறிக்கப்பட் டுள்ள இந்த அளவுகோல், 446 செ.மீ நீளம் கொண்டது. இதன் தொடக்கத்தி லும், இறுதியிலும் பிளஸ் (+) குறியீடு கள் செதுக்கப்பட்டுள்ளன. சரியாக 223 செ.மீ என்ற நடுப்பகுதியிலும் ஒரு குறி யீடு உள்ளது. பண்டைய கணக்கின்படி இது ‘14 அடிக்கோல்’ (20 சாண் அல்லது 9 முழம்) என அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் சாண், அடி போன்ற அளவுகள் மனிதருக்கு மனிதர் மாறுபடும் என்பதால், அரசு அங்கீகரித்த பொதுவான அளவை நிலைநிறுத்த இக் கோல் பயன்பட்டுள்ளது. கோவிலுக்கு வழங்கப்படும் கொடை நிலங்கள் மற் றும் எல்லைப் பிரச்சினைகளைத் தீர்க்க, இந்த அளவுகோலில் கயிற்றை வைத்து அளவெடுத்து நிலங்களை அளந்துள்ள னர். கோயில் சுவரிலேயே இது பொறிக் கப்பட்டுள்ளதால், மக்கள் இதை அறத் தின் அடையாளமாக ஏற்றுக்கொண்ட னர். கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் கொங்கு சோழ மன்னர் விக்கிரம சோழ னின் 20-வது ஆட்சி ஆண்டில், பாளை யப்பாடியான் என்பவரால் இது அமைக் கப்பட்டதாக அருகில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. புள்ளடிக்கோல்: புதிய கண்டுபிடிப்பு இந்த அளவுகோலுடன் சேர்ந்து, எல்லைக் கற்களின் (புள்ளடிக்கற்கள்) அளவைக் குறிக்கும் பிரத்யேகக் குறி யீடும் கண்டறியப்பட்டுள்ளது. நில அள வீட்டில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்கவும், எல்லைக் கற்களை மாற் றாமல் இருக்கவும் இக்குறியீடு உதவி யுள்ளது. தமிழக வரலாற்றில், நிலங் களை அளக்கப் பயன்படுத்தப்பட்ட இத்தகைய நிரந்தர அளவுகோல் மற் றும் எல்லைக் குறியீடு கண்டறியப்படு வது இதுவே முதன்முறை என்பது குறிப் பிடத்தக்கது. இந்த ஆய்வில் ஆய்வா ளர்கள் செந்தில்குமார் மற்றும் ஜீவா ஆகியோர் உடனிருந்தனர்.