மண்ணின் கவசம் ‘உயிர் வேலிகள்’
விவசாய நிலங்க ளின் எல்லைகள் என்பது வெறும் கோடுகள் அல்ல; அவை அந்த நிலத்தின் உயிர்நாடி. முற்காலத்தில் நிலத் தைச் சுற்றி இரும்பு வேலிகளையோ, சுவர் களையோ எழுப்ப வில்லை. அதற்குப் பதி லாக கற்றாழை, முள் கிழுவை, பிரண்டை மற் றும் ஆமணக்கு போன்ற தாவரங்களை நட்டு வளர்த்தனர். இவை ‘உயிர் வேலிகள்’ என்று அழைக்கப்பட் டன. இன்று நவீனமயமாக்கல் என்ற பெய ரில் இந்த இயற்கை அரண்களை அழித்து விட்டு, இரும்பு முள்வேலிகளை அமைப் பதன் விளைவாக விவசாயிகள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர். உயிர் வேலிகள் என்பவை வெறும் பாது காப்பு அரண்கள் மட்டுமல்ல, அவை ஒரு சிறிய அளவிலான சுற்றுச்சூழல் மண்டல மாகவே செயல்படுகின்றன. கற்றாழை மற்றும் முள்கிழுவை போன்ற தாவரங் கள் அடர்த்தியாக வளர்ந்து, ஒரு இயற் கைச் சுவரை உருவாக்குகின்றன. இது காட்டுப்பன்றி, மயில், யானை போன்ற விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தாமல் தடுத்தன. தற்போதைய இரும்பு வேலி களை விலங்குகள் எளிதில் கடந்துவிடு கின்றன அல்லது சேதப்படுத்துகின்றன. இந்தத் தாவரங்களின் வேர்கள் மண்ணை இறுகப் பிடித்துக் கொள்வதால் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. மேலும், இவை நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உயிர் வேலிகள் தேனீக்கள், தட்டான் கள் மற்றும் பறவைகளின் புகலிடமாகத் திகழ்கின்றன. இவை பயிர்களில் உள்ள தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்ப டுத்த இயற்கை எதிரிகளாகச் செயல்படு கின்றன. முன்பு ஒவ்வொரு வரப்பிலும் காணப்பட்ட சோற்றுக் கற்றாழை, இன்று மருந்துக்கடைகளில் மட்டுமே காணப் படுகிறது. கற்றாழை நிலத்தின் ஈரப்ப தத்தை நீண்ட காலம் தக்கவைக்கும் திறன் கொண்டது. அதேபோல், கிழுவை மரம் சிறந்த கிருமிநாசினியாகவும், கால் நடைகளுக்கு மருந்தாகவும் பயன் பட்டது. இவற்றை அழித்துவிட்டு இரும்பு வேலிகள் அமைப்பதால், நிலத்தின் வெப் பம் அதிகரிப்பதோடு, மண்ணின் நுண் ஊட்டச்சத்துகளும் பாதிக்கப்படுகின்றன. தற்போது காட்டு விலங்குகளால் பயிர் கள் சேதமடைவது விவசாயிகளுக்கு மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இதற் குத் தீர்வாக, இரும்பு வேலிகளுக்குப் பதில் மீண்டும் உயிர் வேலிகளை அமைக்க விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உயிர் வேலிக ளின் நன்மைகள் குறித்து வேளாண் துறை கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும். கற்றாழை, கிழுவை போன்ற தாவரங்களின் நாற்று களை அரசு மானிய விலையில் அல்லது இலவசமாக வழங்க முன்வர வேண்டும். மண் வகைக்கும், சூழலுக்கும் ஏற்றவாறு என்னென்ன தாவரங்களை வேலிகளாக நடலாம் என்ற தொழில்நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இரும்பு வேலிகள் துருப்பிடித்து அழிந்து போகும்; ஆனால் உயிர் வேலிகள் வளர வளர நிலத்திற்குப் பலம் சேர்க்கும். லாப நோக்கத்தை மட்டும் பார்க்காமல், நீண்ட கால அடிப்படையில் மண்ணையும், பயிரையும் பாதுகாக்க ‘உயிர் வேலி’ அமைப்பதே புத்திசாலித்தனம். மண் ணுக்கும் மனிதனுக்கும் நன்மை செய் யும் இந்த இயற்கை அரண்களை மீண்டும் எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டா யம். - கே.மகாதேவன்
