tamilnadu

img

ஆக்கிரமிப்பை மீட்டிடுக - சிபிஎம் கோரிக்கை

ஆக்கிரமிப்பை மீட்டிடுக - சிபிஎம் கோரிக்கை

ஆக்கிரமிப்பை மீட்டிடுக - சிபிஎம் கோரிக்கை உடுமலை, டிச. 25 – தனிநபாரல் ஆக்கிரப்பு செய்யப்பட்ட பொது சாக் டையை மீட்க வேண்டும் என  மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை  விடுத்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பிய மனுவில் தெரி வித்துள்ளதாவது, வல்லக் குண்டாபுரம் கிராமத்தில்  அரசுக்கு சொந்தமான சாக்கடையை ஆக்கிரமித்து பொது மக்களுக்கு இடையூறு செய்து வரும் நபர் மீது எந்த நட வடிக்கையும் எடுக்காமல் ஊராட்சி நிர்வாகம் தட்டிக் கழித்து  வருகின்றனர். மேலும் சாக்கடை ஆக்கிரமிப்பு ஊராட்சி அதி காரிக்கு  புகார் தெரிவித்த  கட்சியின் கிளைச் செயலாளரை மிரட்டியது குறித்து தளி காவல் நிலையத்தில் புகார் தரப் பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக சாக்கடை கழிவு நீர் வெளியேறும் வகையில்  ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும். அரசுக்கு சொந்தமான இடத்தை  ஆக்கிரமிப்பு செய்தவர் மீது ஊராட்சி சட்டப்படி நடவ டிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும்  29 ஆம்  தேதி வல்லக்குண்டாபுரம்  ஊராட்சி மன்ற அலுவலகத்தை கட்சியின் சார்பில்  முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று  தெரிவிக்கப்பட்டு உள்ளது.