states

img

கோல்ட்ரிஃப் இருமல் மருந்தால் பார்வையை இழந்து 116 நாட்களுக்கு பின் வீடு திரும்பிய சிறுவன்!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் கோல்ட்ரிஃப் இருமல் மருந்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 116 நாட்களுக்குப் பிறகு பார்வையை இழந்து வீடு திரும்பியுள்ளார். 
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கலந்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குடித்து 24 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிந்த்வாரா மாவட்டம் ஜட்டாச்சாப்பர் கிராமத்தைச் சேர்ந்த குனால் யாதுவன்ஷி, ‘கோல்ட்ரிஃப்’ (Coldrif) என்ற இருமல் சிரப் குடித்த பிறகு தீவிரமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒருவராக இருந்தார். பல மாதங்கள் தீவிர சிகிச்சை, தொடர்ச்சியான டயாலிசிஸ் மற்றும் இடைவிடாத மருத்துவ பராமரிப்பின் மூலம் உயிர் தப்பியுள்ளார்
ஆனால் மருந்தின் தாக்கத்தால் குனாலின் பார்வை நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரால் பார்க்க முடியவில்லை. மேலும் நடப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் உடல்நிலை முழுமையாக சரியாகும் என உறுதியாக கூற முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் 116 நாட்கள் மருத்துவ போராட்டத்திற்கு பிறகு குனால் இன்று வீடு திரும்பியுள்ளார்.