இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் ஆர்.நல்லகண்ணுவின் 101-ஆவது பிறந்தநாளை ஒட்டி சிபிஎம் மாநிலக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் தளத்தில், “விடுதலைப் போராட்ட வீரராகத் தன் இளம் வயதைச் சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்து, ஏழை எளிய மக்களுக்காகக் குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தையும், சுற்றுச்சூழலையும் காத்திடத் தொடர்ந்து பாடுபட்டு வரும் சிபிஐ மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்குப் பிறந்த தினம் இன்று. நலமுடன் வாழ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வாழ்த்துகிறது.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
