உதகை மலர் கண்காட்சிக்காக நாற்று நடவுப் பணி துவங்கியது!
உதகை, டிச.25- அடுத்தாண்டு மே மாதம் நடை பெறவுள்ள மலர் கண்காட்சிக்காக, உதகை தாவரவியல் பூங்காவில் புதனன்று நாற்று நடவு செய்யும் பணி துவங்கியது. நீலகிரி மாவட்டம், உதகைக்கு விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறையின் போது அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தரு வது வழக்கம். இவர்களை மகிழ் விக்க ஆண்டுதோறும் மே மாதம் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வரு கிறது. இதற்காக 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படும். மலர் கண்காட்சி தினத்தன்று மலர் தொட்டிகள் அலங் கரிக்கப்பட்டு, பல்வேறு அழகான வடிவங்களில் சுற்றுலாப் பயணி கள் பார்வைக்காக வைக்கப்பட்டி ருக்கும். மலர் கண்காட்சிக்கு பல லட்சம் மலர் செடிகள் நடவு செய் யப்படும். இவைகளின் வளர்ச்சி காலத்தை பொறுத்து விதை விதைக்கும் பணிகள் துவங்கும். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் விதைகள் சேகரிக்கப்பட்டு, நவம்பர் மாதத்தில் விதை விதைக் கும் பணிகள் துவங்கும். கடந்த மாதம் விதைகள் விதைக்கும் பணி கள் முடிந்த நிலையில், 6 மாதங் களுக்கு பின் பூக்கும் மலர் செடி களான பெகோனியா, ரெகன்கி ளாசம், வால்சம், சோலியாஸ், லிசி யந்தால், சால்வியா மற்றும் டென் பீணம் ஆகிய வகைகளை சேர்ந்த மலர் நாற்றுக்கள் தாவரவியல் பூங்காவின் மேல் பகுதியில் நர்சரி யில் உற்பத்தி செய்யப்பட்டது. நாற்றுகள் தயாராக உள்ள நிலையில், 5 மாதங்களுக்கு பின் பூக்கும் தாவரங்களான சால்வியா உட்பட பல்வேறு மலர் செடிகள் நடவு பணிகள் புதனன்று துவங்கி யது. பூங்காவில் உள்ள இத்தாலி யன் பூங்கா குளங்களின் ஓரங்களி லும், அங்குள்ள பாத்திகளில் சால் வியா மலர் செடிகள் நடவு பணி கள் துவங்கியது. குளங்களை சுற்றி லும் மலர் நாற்றுகள் நடவு செய்யப் பட்டுள்ளது. பூங்காவில் உள்ள பிற இடங்களிலும் 5 மாதங்களுக்கு பின் பூக்கும் மலர் செடிகளை நடவு செய்யும் பணிகள் படிப்படியாக துவக்க பூங்கா நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது.