tamilnadu

img

சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம்

சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம்

தருமபுரி, டிச.25- ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 20க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர். தருமபுரி மாவட்டம், அரூர்  அருகே உள்ள மொண்டுகுழி பகுதியைச் சேர்ந்த அன்பழ கன் என்பவர் அண்மையில் இறந்துள்ளார். அவரின், ஈமச் சடங்கிற்காக அவரது உறவி னர்கள் 40க்கும் மேற்பட்டோர்  2 தனியார் சுற்றுலா வாகனத்தில் ஒகேனக்கல் பகுதிக்கு வியாழனன்று வந்துள்ளனர். அப் போது ஒகேனக்கல் கணவாய் பகுதியில் ஆஞ் சநேயர் கோவிலின் மேல் இரண்டாவது  வளைவில், முன்னால் சென்ற சுற்றுலா வேன்  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை யோரத்தில் இருந்த சிறிய தடுப்பின் மீது  ஏறி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. இவ்விபத்தில் வாகனத்தில்  பயணித்த 20க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்த நிலையில், 108 ஆம்புலன்ஸ் வாக னத்தின் மூலம் மீட்டு பென்னாகரம் அரசு  மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கணவாய் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதால், ஒகேனக்கல் பகு திக்கு சுற்றுலா வந்த வாகனங்கள் சுமார்  2 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையில்  நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது. இவ்விபத்து குறித்து ஒகேனக் கல் காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.