tamilnadu

img

சிஐடியு கிளைகள் துவக்கம்

சிஐடியு கிளைகள் துவக்கம்

கோவை, டிச.25- இருகூர் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சிஐடியு தொழிலாளர் சங்கக் கிளைகள் துவங்கப்பட்டது. கோவை மாவட்டம், இருகூரில் உள்ள பாரத் பெட்ரோலி யம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் சங்கமும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க மும் புதிதாகக் கிளை அமைப்புகளாக உருவாக்கப்பட்டு, பெயர் பலகை திறப்பு, கொடியேற்று விழா வியாழனன்று நடைபெற்றது. டேங்கர் லாரி ஓட்டுனர்கள் சங்கக் கொடியை பாலசுப்ர மணியன் ஏற்றிவைத்தார். ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கக் கொடியை சம்பத் ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர். வேலுசாமி, சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் வே.  விஜயராகவன், சூலூர் தாலுகா ஒருங்கிணைப்பாளர் ஜெ.  ரவீந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதனையடுத்து, இரு சங்கங்களுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். விழாவில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.  இதேபோல புதனன்று காங்கேயம் பாளையம் பகுதியில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் புதிய கிளை துவங் கப்பட்டது.