இஎஸ்ஐ மருத்துவமனைக்கு நடமாடும் வாகனம்!
உடுமலை, டிச. 25- உடுமலை இஎஸ்ஐ மருத்துவம னைக்கு நடமாடும் புதிய வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என சிஐடியு பஞ்சாலை சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் தலை வர் செல்வராஜ் கூறுகையில், உடுமலை தாலுகா இஎஸ்ஐ மருத்துவமனை 1960 ஆம் ஆண்டு முதல் 70 ஆண்டுக ளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு நிலை மருந்துவமனை மற்றும் தொழிற்சாலைகள் செயல்படும் பகுதி களுக்கு வாகனத்தில் சென்று மருத்து வம் பார்க்கும் நடமாடும் மருந்துவ மனை என்று சிறப்பாக இயக்கி வந்தது. உடுமலை இஎஸ்ஐ நிலை மருத்துவ மனையில் சிகிச்சை பெற சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலா ளர்களும், நடமாடும் வாகனம் செல் லும் பூலாங்கிணர், எஸ்.வி. புரம் மற் றும் தொழிற்சாலைகளில் தங்கி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை பெற சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளார்கள். கடந்த நான்கு மாதங்களாக அர சுக்கு சொந்தமான நடமாடும் மருந்தக வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் வாகனத்தில் சென்று தொழிலாளர்க ளுக்கு சிகிச்சை தரப்பட்டு வருகி றார்கள். இதுகுறித்து அதிகாரிகளை கேட்டால் மருந்துவமனையில் இருக் கும் நடமாடும் வாகனம் 22 ஆண்டு பழமையானது அதனால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாக னத்தை புதுப்பிக்க முடியாத நிலையில் அந்த வாகனத்தை இயக்குவதில்லை என்கின்றனர். ஆனால் தனியார் வாக னங்கள் மூலம் காலையும், மாலையும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை தரப் பட்டு வருகிறது, என்கிறார்கள். பல ஆயிரம் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வரும் இஎஸ்ஐ மருத் துவமனையின் வாகனங்கள் முறை யான பராமரிப்பு இல்லாமல் உள்ளது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்து கிறது. மேலும் தனியார் தொழிற்சாலை நிறுவனங்களின் வாகனங்களை மருத் துவ தேவைக்கு பயன்படுத்துவது முறையாக இருக்காது என்பதால் உட னடியாக உடுமலை மருத்துவமனைக்கு புதிய நடமாடும் வாகனம் மற்றும் தொழி லாளர்கள் கோவை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்களை அரசு தர வேண்டும், என்றார்.