tamilnadu

img

பழங்குடியின வாலிபர் மரணத்தில் மர்மம் கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் தாய் புகார்

பழங்குடியின வாலிபர் மரணத்தில் மர்மம்
கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் தாய் புகார்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுக்கா மொரப்பாக்கம் கிராமத்தில் இருளர் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த காசி - கமலா தம்பதியினரின் மகன் கார்த்தி கேயன் என்பவர், வந்தவாசி அடுத்த வழுர் கிராமத்தைச் சார்ந்த கன்னியப்பன் மகள் வசந்தியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக கார்த்திகேயன் திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17. 03. 2025 மாலை கார்த்திகேயன் வேலை செய்து வந்த மாந்தோப்பில் இறந்து கிடப்ப தாக அக்கம் பக்கத்தினர் கூறிய தகவலின் அடிப்படையில், கார்த்திகேயன் மனைவி வசந்தி அவரது சகோதரி சரஸ்வதி ஆகி யோர் மாந்தோப்புக்கு சென்று கார்த்தி கேயன் சடத்தை பார்த்து கதறி அழுதனர். பின்னர் மாந்தோப்பின் உரிமையாளரான மாதவரத்தைச் சேர்ந்த வேம்புலி என்பவர் அங்கு வந்து, ஆம்புலன்ஸ் மூலம் கார்த்தி கேயன் சடலத்துடன், வசந்தி, சரஸ்வதி ஆகியோரை வந்தவாசி எடுத்த வழூர் கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அதைத்தொடர்ந்து உயிரிழந்த கார்த்திகேயன் தாயார் கமலா, தனது மகன் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே, உடற்கூராய்வு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வந்தவாசி அடுத்த கீழ் கொடுங்காலூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். நிகழ்வின் போது, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா. சரவணன், மாவட்ட செயலாளர் மாரி முத்து, சிபிஎம் வட்டார செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் உடன் இருந்த னர்.