காரகஸ், பிப். 11 - அமெரிக்காவால் நாடு கடத்தப் பட இருந்த தனது நாட்டு மக்கள் 190 பேரை, சொந்த விமானத்தை அனுப்பி கண்ணியமான முறையில் மீட்டு வந்துள்ளது, இடதுசாரி ஆட்சி நடக்கும் வெனிசுலா. ‘தாயகத்திற்கு திரும்புதல்’ திட்டம் மூலம் அவர்கள் வெனி சுலாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ள தாக வெனிசுலா இடதுசாரி ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அறிவித்துள்ளார். நாடு கடத்தும் டிரம்ப் போதிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் இருக்கும் வெளி நாட்டினரை, நாடு கடத்தும் வேலை யில், அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு ஆவ ணங்கள் இல்லாமல் இருப்போரை, மிகமோசமான முறையில், கை- கால்களில் விலங்கு பூட்டி, ராணுவ விமானம் மூலம் டிரம்ப் நாடு கடத்தி வருகிறார். ஏற்கெனவே, மெக்சிகோவைச் சேர்ந்தவர்களை இவ்வாறு கை-கால்களில் விலங்கு பூட்டி நாடு கடத்திய அமெரிக்கா, கடந்த வாரம், டெக்ஸாசில் இருந்து புறப்பட்ட சி-17 விமானத்தில் 104 இந்தியர்களையும் இதேபோல கை- கால்களில் விலங்குபூட்டி நாடு கடத்தியது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
நாடாளுமன்றத்தில் அமளி
இதையொட்டி, நாடாளு மன்றத்தில் காங்கிரஸ், இடதுசாரி கள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். நாடாளுமன்றம் ஒத்திவைக்கப் பட்டது. அப்போது, மாநிலங்களவையில் விளக்கம் அளித்த வெளியுறத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல. 2009-ஆம் ஆண்டு முதல் பலர் நாடு கடத்தப் பட்டுள்ளனர். நாடு கடத்தும் செயல்முறையும் புதிதல்ல. அது பல ஆண்டுகளாக இருந்து வரு கிறது. இது ஒரு நாட்டுக்கு மட்டும் பொருந்தக்கூடிய கொள்கையும் அல்ல. 2025 பிப்ரவரி 5 அன்று இந்தியா வந்து சேர்ந்த இந்தி யர்கள் விஷயத்திலும் கடந்த கால நடைமுறைகளே பின்பற்றப்பட்டன. அதில் எந்த மாற்றமும் இல்லை.
கையை விரித்த ஜெய்சங்கர்
அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தால் (Immigration and Customs Enforcement) ஒழுங்கமைக்கப் பட்டு, இந்த நாடு கடத்தல்கள் செயல்படுத்தப்படுகின்றன. விமா னம் மூலம் நாடு கடத்தப்படு வதற்கான விதிமுறைகள் 2012 முதல் அமலில் உள்ள எஸ்ஓபி (standard operating procedure) -யை அடிப்படையாகக் கொண்ட வை” என்று முழுக்க முழுக்க அமெரிக்க அரசின் நடவடிக்கைகள் சரிதான், நாம் ஒன்றும் செய்ய முடியாது என்று பேசியிருந்தார். “கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்படுவோருக்கு உணவு, மருத்துவத் தேவை, கழிவறை பயன் படுத்துதல் உள்ளிட்ட அவசரத் தேவை களின்போது தற்காலிகமாகக் கட்டுப் பாடுகள் தளர்த்தப்படும்” எனவும் சமா ளித்தார். இது மேலும் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. நாள் முழுவதும் நாடாளு மன்ற அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
மீட்டுவந்த வெனிசுலா
இவ்வாறு கை - கால்களில் விலங்கி டுவதைத் தடுக்கவோ அல்லது நாமா கவே விமானம் அனுப்பி இந்தியர்களை அழைத்துவரவோ வழியில்லை என்பதை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தான், வெனிசுலா அந்நாட்டு மக்கள் 190 பேரை தனது சொந்த (அரசு) விமா னங்கள் மூலமாக அழைத்து வருவ தற்கான திட்டத்தை அறிவித்து கண்ணி யமாக அழைத்து வந்துள்ளது. இத்திட்டம் வெனிசுலா மக்கள் அமெரிக்காவில் இருந்து திரும்புவதை எளிமையாக மாற்றும் நோக்கத்தை கொண்டது. இந்த முயற்சியில் அரசாங்கத்தின் முன் முயற்சியை பறைசாட்டும் வகை யில் அரசுக்கு சொந்தமான விமான நிறு வனமான ‘கான்வியாசா’ மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பொருளாதாரத் தடையே காரணம்
வெனிசுலா மீது அமெரிக்கா விதித் துள்ள பொருளாதார தடைகளால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைகள் தேசிய வருமானத்தில் கணிசமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது என அந் நாட்டு ஜனாதிபதி மதுரோ அமெரிக்கா மீது குற்றம் சாட்டியுள்ளார். இது போன்று உலக நாடுகளின் மீதான அமெரிக்காவின் தடைகளால் ஏற்பட்ட வேலையின்மை - பொருளா தார நெருக்கடிகளால் பல லட்சம் மக்கள் அமெரிக்காவை நோக்கிச் செல்லும் சூழல் உருவானது. இந்நிலையில் அவர் களை அங்கிருந்து துரத்தி மீண்டும் ஒரு நெருக்கடிக்குள் அமெரிக்கா தள்ளு கின்றது என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கண்ணியமாக நடத்த வலியுறுத்தல் இவ்வாறான சூழலில் தனது குடி மக்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என வெனிசுலா ஜனாதிபதி மதுரோ, அமெரிக்காவை வலியுறுத்தியதுடன், குடிமக்களின் கண்ணியத்தைக் காப் பாற்றும் வகையில் பொருளாதார நெருக்கடி உள்ள சூழலிலும் விமானங்க ளை அனுப்பியுள்ளார். மக்களை அழைத்துவர இரண்டு ‘கான்வியாசா’ விமானங்களை அமெ ரிக்காவுக்கு அனுப்பியதாக குறிப்பிட்ட மதுரோ அவ்விமானங்கள் தரை இறங்குவது தொடர்பாக பல நெருக்கடி களை அமெரிக்கா கொடுத்தது. இத னால் மக்களை அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.