மோடி அரசே, புதிய தொழிலாளர் விரோதச் சட்டங்களை திரும்பப் பெறு! தமிழகம் முழுவதும் இடதுசாரிகள் - விசிக ஆர்ப்பாட்டம்!
சென்னை, டிச. 8 - ஒன்றிய பாஜக அரசின் தொழி லாளர் விரோத புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத் தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில், தமிழகம் முழு வதும் திங்களன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்களில் பல்லா யிரக்கணக்கானோர் பங்கேற்று, மோடி அரசின் தொழிலாளர்களுக்கு எதிராக கண்டனம் முழங்கி கைதாகினர். நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துக் கட்டி யுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட 4 புதிய தொழிலாளர் சட்டங்களை (Four Labour Codes) 5 ஆண்டுகளுக்குப் பிறகு அமல் படுத்தியுள்ளது.
12 மணி நேரம் வரை தொழிலாளி யிடம் வேலை வாங்கலாம்; தொழி லாளியின் சம்மதமின்றி 3 மாதத்திற்கு 125 மணி நேரம் வரை ஓவர் டைம் வேலை வாங்கலாம்; சட்டச் சலுகைகள் இல்லாமல் 50 பேர் களைக் கூட ஒப்பந்தத் தொழிலாளர் களாக வைத்திருக்கலாம்; ரூ.18 ஆயிரம் சம்பளம் பெறுபவர்கள் தொழிலாளர்களாக கருதப்பட மாட்டார்கள்; அவர்களுக்கு அடிப் படைச் சம்பளத்தை அரசு நிர்ணயிக்க வேண்டியது கட்டாயமல்ல; 40 தொழிலாளர்களுக்கு குறைவாக பணியாற்றும் நிறுவனங்கள் இனி தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வராது; நிறுவனம் நடத்துவோர், தொழி லாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 12 சதவிகிதத்திற்குப் பதில் இனி 10 சதவிகிதம் பங்களிப்பு செலுத்தினால் போதுமானது; தொழிற்சாலைகளை ஆய்வுசெய்ய அரசு அனுமதி இல்லாமல் அதிகாரிகள் செல்லக் கூடாது என்று சட்ட விதிகளைத் திருத்தியுள்ளது.
இதனைத் திரும்பப் பெற வேண்டும் என்றே திங்களன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை சென்னையில் எழும்பூர் ராஜ ரத்தினம் ஸ்டேடியம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, சிபிஐ மாநில துணைச் செயலாளர் நா. பெரியசாமி, விசிக துணைப் பொதுச் செயலாளர் கவுதம சன்னா, சிபிஐ (எம்எல்)லிபரேசன் மாநி லக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் பேசினர். கடலூர் கடலூர் தலைமை அஞ்சல் நிலை யம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பால கிருஷ்ணன், சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மு. கண்ணகி, விசிக மாநில அமைப்புச் செயலாளர் திரு மார்பன், சிபிஐ(எம்எல்)லிபரேசன் மாவட்டக் குழு உறுப்பினர் ராஜ சங்கர், சிபிஐ மாவட்டச் செயலாளர் பி.துரை உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் கோயம்புத்தூர் டாடாபாத் பகுதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு தலை வர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் வளவன் வாசு தேவன், சிபிஐ(எம்எல்)லிபரேசன் மாவட்டச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் மாவட்டச்செயலாளர் சி.பத்மநாபன், சிபிஐ மாநில பொரு ளாளர் எம். ஆறுமுகம், மாவட்டச் செய லாளர் சிவசாமி, விசிக மாவட்ட நிர்வாகி கோவை குரு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். திருப்பூர் திருப்பூர் தீரன் சின்னமலை வடக்கு பேருந்து நிலையம் முன்பு சிபிஐ மாநகர் மாவட்டச் செயலா ளர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
சிபிஎம் மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் எம். ரவி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வெ. கனிய முதன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாவட்டச் செயலாளர் கே. முத்துகிருஷ் ணன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக் கண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செய லாளர் கி. கோவேந்தன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாவட்டச் செய லாளர் கெ. கோவிந்தராஜ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் இரா. சிசு பாலன், சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச்செல்வம் மற்றும் விசிக மாவட்டச் செயலாளர்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர். இதேபோல தமிழ்நாடு முழுவதும் 39 மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இவற்றில், சிபிஐ (எம்), சிபிஐ, வி.சி.க., சிபிஐ(எம்எல்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் மாநில - மாவட்டத் தலைவர்கள் பங்கேற்ற னர். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதர வான நான்கு தொழிலாளர் விரோதச் சட்டங்களையும் ஒன்றிய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
