states

img

வணிக தலைநகரில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்

வணிக தலைநகரில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்

இந்தியாவின் வணிக தலைநகரான மும்பையில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஓடிபி முதல் போலி கார்டுகள் உருவாக்குவது வரை மும்பையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 ஆயிரம் சைபர் குற்றம் சார்ந்த வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இதில், பாதிக்கப்பட்டவர்கள் மொத்த மாக சுமார் 2,000 கோடி ரூபாய் வரை யிலான பணத்தை இழந்துள்ளனர். இதுவரை புகார் அளிக்கப்பட்டு மீட்கப் பட்ட பணத்தின் அளவு இழந்த தொகையு டன் ஒப்பிடுகையில் மிகச் சொற்பமான தொகையாகவே உள்ளது.  கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 4,132 வழக்குகள் கிரெடிட், டெபிட் கார்டு மோசடிகள், ஏடிஎம் மோசடி, போலிக் கார்டுகளை உருவாக்குவது ஆகியவை உள்ளன. இது போன்ற குற்றங்களில் சுமார் 161.5 கோடி ரூபாயை மக்கள் இழந்துள்ளனர். இதே நேரத்தில் வெறும் 4.8 கோடி ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டுள் ளது. சிசிடிவி இருக்கும் இடங்களில் உள்ள கடைகளில் கார்டுகளை ஸ்வைப் செய்யும்போது, அதில் பதிவா கும் அட்டை எண் மற்றும் பின் எண் ஆகிய வற்றைக் கொண்டு கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகள் குளோனிங் செய் யப்பட்டு பணம் திருடுவதும் அதிகரித்தி ருப்பதாகக் கூறப்படுகிறது. பல மோசடிகள் குறித்து வங்கிகளி டம் புகார் அளிக்கப்பட்டாலும், அந்தப் பணப்பரிமாற்றங்களை வங்கிகள் ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. மோசடி நடந்து மூன்று நாள்களுக்குப் பின் புகார் அளித்தால் அந்த மோசடியில் வங்கிகள் எந்தப் பொறுப்பையும் ஏற்பதில்லை. எனவே, இதுபோன்ற மோசடிகளின்போது, வங்கிகள், பணப் பரிமாற்றத்தை திரும்பப் பெறும் நடவ டிக்கையில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்ட வர்களின் பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பலரும் கோரிக்கை வைத்து வரு கிறார்கள்.