இன்று நாடாளுமன்றத்தில் எஸ்ஐஆர் பற்றி விவாதம்
எதிர்கட்சிகளின் தொடர் போரா ட்டத்தை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத் தப்பணிகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க பாஜக அரசு ஒப்புக்கொண்டு ளது. இந்த தீவிர திருத் தப் பணி டிசம்பர் 11 அன்றுடன் முடிவ டைகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16 அன்று வெளியாக உள்ளது. அதில் பெயர் விடுபட்டவர்கள் 2026 ஜனவரி மாதம் வரை ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்றா லும், ‘தற்போதைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது லட்சக்கணக்கானோர் வாக்குரிமையை இழக்க நேரிடும்’ என்ற அச்சம் நிலவுகிறது. இறுதிப் பட்டி யல் 2026 பிப்ரவரி 14, அன்று வெளி யாகவுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மூலமாக நாடு முழுவ தும் பல லட்சம் வாக்காளர்களின் பெயர் கள் நீக்கப்பட்டு வரும் நிலையில் அது குறித்து திறந்த விவாதம் நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றன. ஆனால் பாஜக அரசு அதனைப்பற்றி கண்டு கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், அவர்க ளின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி கள் (எஸ்ஐஆர்) குறித்து விவாதிக்க ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதற்காக 10 மணி நேரம் ஒதுக்கப் பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகா ரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதிப்படுத்தியுள்ளார். எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் சீர்திருத் தங்கள் குறித்த விவாதம் நாடாளு மன்றத்தின் மக்களவையில் இன்று (டிச.9) நண்பகல் நடைபெறும். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு, கேரளா, புதுச் சேரி, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதே சங்களில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில், சுமார் ஒன்றரை கோடிக்கும் அதிகமான வாக்காளர்க ளின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் உருவாகி யுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 59 லட்சம் முதல் 85 லட்சம் வரையிலான வாக்கா ளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட வில்லை என்று கூறி, அவை நிராக ரிக்கப்படும் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளன. இது மாநிலத்தின் மொத்த வாக்காளர்களில் சுமார் 13 சதவீத மாகும்.
