states

img

வந்தே மாதரம் எந்த  அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல - அகிலேஷ்

வந்தே மாதரம் எந்த  அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல - அகிலேஷ்

வந்தே மாதரம் எந்த அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல என  சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகி லேஷ் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.  வந்தே மாதரத்தின் 150 ஆவது ஆண்டு விழாவையொட்டி  பாஜக அரசு  நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதத்தை நடத்தியது. இது தொடர்பான மக்க ளவை சிறப்பு விவாதத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “ஆளும் பாஜக அனைத்தை யும் அரசியல் ஆதாயத்திற்காக சொந்த மாக்கிக் கொள்ள முயற்சிக்கிறது. ‘வந்தே மாதரம்’ சுதந்திரப் போ ராட்டத்திற்கும், இந்திய மக்களுக்கும் சொந்தமானது, எந்த அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல. நாட்டின் கோடிக்க ணக்கான மக்களை விழித்தெழச் செய்யும் பாடலை வழங்கியவர் பங்கிம் சந்திர சட்டர்ஜி. ‘வந்தே மாதரம்’ வெறுமனே பாடப்ப டுவதற்காக அல்ல, மாறாக வாழ்வை  நடத்துவதற்கானது, கடந்த சில பத்தாண்டுகளை பாருங்கள், பாஜகவை சேர்ந்த எத்தனை நபர்கள் அதற்கேற்ப வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் தான் முன்பு தேசத்தை காட்டிக் கொடுத் தார்கள். இப்போதும் கூட அவர்கள் நாட்டை காட்டிக் கொடுக்கிறார்கள். பிரிவினை சக்திகள் இன்று இந்த தேசத்தை துண்டாட விரும்புகின்றன.  சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பங்கேற்காதவர்களுக்கு, வந்தே மாதரம் பாடலைக் கொண்டாடுவது பற்றி  என்ன தெரியும்?” என கடுமையாக பாஜக அரசை விமர்சித்துள்ளார்.