states

img

மலையாள நடிகர் திலீப் பாலியல் வழக்கில் விடுதலை : இறுதித்தீர்ப்பல்ல, மேல்முறையீட்டுக்கு செல்லும் கேரள அரசு

மலையாள நடிகர் திலீப் பாலியல் வழக்கில் விடுதலை : இறுதித்தீர்ப்பல்ல, மேல்முறையீட்டுக்கு செல்லும் கேரள அரசு

திருவனந்தபுரம் திரையுலகையே உலுக்கிய நடிகை மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், எட்டு ஆண்டு விசாரணைக்குப் பிறகு  2025 டிசம்பர் 8 அன்று விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நிலையில், முக்கியக் குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட  பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  2017 பிப்ரவரி மாதம் ஒரு முன்னணி மலை யாள நடிகை ஒருவர் டப்பிங் பணிக்காக திருச் சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் 2017 ஜூலை  மாதம் கைது செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சிலரும் கைது செய்யப்பட்டனர்.  தற்போது விசாரணை  நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில்  பல்சர் சுனி, மார்ட்டின் ஆண்டனி, பி. மாணிக்கண்டன், வி.பி. விஜேஷ், எச். சலீம், பிரதீப் ஆகியோர் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.   நடிகர்  திலீப் மீதான குற்றத்தை உறுதி செய்ய தவறியதால் அவர் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணையை மேற் பார்வையிட்ட ஓய்வுபெற்ற டி.ஜி.பி. பி. சந்தியா, நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை இறுதித் தீர்ப்பா கக் கருதக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய கேரள அரசு  திட்டமிட்டுள்ளது இதனை கேரள சட்டத்துறை அமைச்சர் பி.ராஜீவ் உறுதிப்படுத்தியுள்ளார்.