சட்டங்களை வளைத்துக் கொள்ள திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நெருக்கடி
புதுதில்லி கடந்த ஒரு வாரமாக இண்டி கோ விமான நிறுவனம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்ததால், நாடு முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இது தற்செயலான நிகழ்வு அல்ல, இது திட்டமிட்ட “செயற்கை நெருக்கடி” என்று விமானிகள் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த நெருக்கடி, தனியார் மயம், ஏகபோகம், கார்ப்பரேட் லாப வெறி, அரசு - கார்ப்பரேட் கூட்டணி ஆகிய பிரச்சனைகளை யும் அம்பலப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு விதிகள் இந்தப் பிரச்சனையின் பின்ன ணியில் விமானப் பணி நேர வரம்பு (Flight Duty Time Limit - FDTL) உள்ளது. இந்த விதிகள் விமானிகள் மற்றும் விமானப் பணிக்குழுவி னரின் ஓய்வு நேரத்தை அதிகரித்து, இரவுப் பணி வரம்பைக் குறைத்து, விமானப் பாதுகாப்பை உறுதி செய் வதை நோக்கமாகக் கொண்டுள் ளன. சோர்வுடன் பணிபுரிவதால் ஏற்படும் விமான விபத்துகளைத் தவிர்க்கவே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. 2025 நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்தது. ஆனால் அது முறையாக அமலாக்கப்பட வில்லை. இந்த மாற்றங்கள் விமானப் போக்குவரத்து துறையில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் அடித்து வரும் லாபக் கொள்ளைக்கு தடையாக இருப்பதால், அவர்கள் இதை விரும்பவில்லை. குறைந்த பணியாளர்களை வைத்து அதிக நேரம் வேலை செய்ய வைக்கும் “சுரண்டல் முறை”க்கு இது தடையாக உள்ளது.குறைந்த பணி யாளர்களை வைத்து அதிக வரு வாய் பெற வேண்டும் என்ற இண்டி கோ நிறுவனத்தின் நோக்கமே இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்றும் விமானிகள் சங்கங்கள் பைலட் யூனியன்கள் குற்றம் சாட்டுகின்றன. தற்போது விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட குழப்பத்தை சாதகமாகப் பயன் படுத்திக்கொண்டு, இண்டிகோ நிறு வனத்திற்கு மட்டும் இந்திய அரசின் விமான போக்குவத்து ஒழுங்கு முறை ஆணையம் (DGCA) பாதுகாப்பு விதிகளில் தற்காலிகத் தளர்வு அளித்துள்ளது. இது 2026 பிப்ரவரி வரை நீடிக்கும். இத்தகைய விதிவிலக்கு களைப் பெறுவதற்கான அழுத் தத்தை உருவாக்கவே இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டு விமான ரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பெருமளவு பொதுமக்கள் அவதிப் படுவதன் மூலம் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்து, பாது காப்பு விதிகளை தளர்த்த வைக்க முயல்கிறது என விமானிகள் சங்கத் தலைவர் சாம் தாமஸ் குற்றம் சாட்டியுள்ளார். பாதுகாப்பு விதிகளில் தளர்வு அளிப்பது விமானிகளின் சோர்வை அதிகரித்து, விமான விபத்துக்களுக்கான அபாயத்தை உருவாக்கும். இது மக்கள் பாது காப்பைக் கைவிட்டு, கார்ப்பரேட் லாபத்திற்கு முன்னுரிமை அளிக் கும் ஆபத்தான செயல் என்று தொழிலாளர் அமைப்புகள் எச்ச ரிக்கை விடுத்துள்ளன. தேர்தல் பத்திரம் மூலம் லஞ்சம் கொடுத்த நிறுவனம் 2023-ஆம் ஆண்டில் இண்டிகோ நிறுவனம் பெரும் தொகையை நன்கொடையாக அளித்த விவகா ரம் தற்போது வெளியே வந்துள் ளது. இந்திய தேர்தல் ஆணையம் 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட தர வுகளின்படி, இண்டிகோ நிறுவ னத்தை இயக்கும் இண்டர் குளோ பல் குழுமம், தேர்தல் பத்திரங்க ளை வாங்கிய போக்குவரத்துத் துறை சார்ந்த மிகப்பெரிய நிறுவன மாக உள்ளது. இந்தக் குழுமம் மொத்தம் 36 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி யுள்ளது. இண்டிகோ குழுமத்தின் இண்டர் குளோபல் ஏவியேசன், இண்டர் குளோபல் ஏர் டிரான்ஸ் போர்ட், இண்டர் குளோபல் ரியல் எஸ்டேட் வெண்சர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் தலா 1 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 36 பத்திரங்களை வாங்கின. இந்திய விமானப் போக்கு வரத்துச் சந்தையில் 63 சதவிகித பங்கை இண்டிகோ நிறுவனம் கொண்டுள்ளது. டாட்டாவிற்கு விற்கப்பட்ட இந்திய அரசின் விமா னமான ஏர் இந்தியா 13.6 சதவிகிதம் மட்டுமே கொண்டு இராண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய மக்களின் பொதுச் சொத்துக்களை கொடுத்து அம்பானியையும் அதா னியையும் மிகப்பெரிய முதலாளிக ளாக வளர்த்து விட்ட மோடி அரசு. அதேபோல கொரோனா காலத்தில் இருந்தே விமான போக்குவரத்து துறையில் இண்டிகோ நிறுவ னத்தை ஏகபோக நிறுவனமாக வளர்த்து விட்டுள்ளது. தற்போதைய விதி விலக்குகள் விமானப் பயணிகளின் உயிரை ஆபத்தில் தள்ளி அனைவரையும் சுரண்டி இண்டிகோ நிறுவனம் மேலும் அதிக ஆதிக்கத்தை செலுத்த வழிவகை செய்யும். உலகம் கற்றுக்கொண்ட பாடம், இந்தியாவுக்கு எச்சரிக்கை விமான விபத்துகளுக்கு விமா னியின் சோர்வு முக்கியக் காரணம் என்பதை மேற்கு நாடுகளும் சீனா வும் உணர்ந்த பிறகு, வேலை நேரத்தைக் குறைத்து, ஓய்வு நேரத்தை அதிகரித்து, பாதுகாப்பு விதிகளை வலுப்படுத்தின. பெரும் விபத்துகள் மற்றும் தொழிலாளர் போராட்டங்களுக்குப் பிறகே இந்த மாற்றங்கள் வந்தன. இந்தியாவும் இந்தக் கடுமை யான பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். விமானப் போக்குவரத்து ஒழுங்கு முறை அமைப்பானது கார்ப்பரேட் நிறுவ னங்களின் அழுத்தத்திற்கு அடி பணியாமல், தனது சுதந்திரத்தை யும் பொறுப்பையும் மீட்டெடுக்க வேண்டும்.
