tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மே 14-அரியலூரில்  கல்லூரி கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி

அரியலூர், மே 11- அரியலூரில் மே 14 ஆம் தேதி ‘நான் முதல்வன், கல்லூரி கனவு’ வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெறுவதாக ஆட்சி யர் பொ.ரத்தினசாமி தெரிவித்தார். இது தொடர்பான ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நடைபெற்ற மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பல்வேறு காரணங்களால் பள்ளி செல்லாத 1,219 மாணவர்களை அடையாளம் கண்டு 14.5.2025 அன்று நடைபெறவுள்ள கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டி முகாமுக்கு வரச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த 2023-2024 ஆம் ஆண்டில் உயர்கல்வியில் சேராத மாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று  அந்த மாணவர்களையும் கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.  மேலும், நான் முதல்வன் திட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

சீமை கருவேல மரத்தை  அகற்ற கோரிக்கை

பாபநாசம், மே 11 - தஞ்சாவூர் அய்யம்பேட்டை ரயில்வே கேட்டை தாண்டி  வடக்கு மாங்குடி செல்லும் மெயின் சாலையில் செருமாக்க நல்லூர் பேருந்து நிழற்குடை உள்ளது. இதனருகே சாலை யில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சீமை கருவேல  மரத்தை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “அய்யம்பேட்டை ரயில்வே கேட்டை தாண்டி சாலை செல்கிறது. இச்சாலை  வழியே செருமாக்கநல்லூர், வடக்கு மாங்குடி, அகர மாங்குடி, காவலூர், பெருமாக்கநல்லூர், மெலட்டூர் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லலாம். இந்தச் சாலையில் அரசு நகரப் பேருந்து, கார், ஆட்டோ, பைக் உள்ளிட்ட ஏராள மான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில்  செருமாக்க நல்லூர் பேருந்து நிழற்குடை அருகில் சாலையோரமுள்ள சீமை கருவேல மரம் அடர்ந்து சாலையின் பாதி வரை பரவி போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனால் விபத்து நேரும் அபாயம் உள்ளதால், சீமை கருவேல மரத்தை  வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்” என்றனர்.

சொத்து பிரச்சனையில் சகோதரர்களிடையே மோதல்

ஸ்ரீவில்லிபுத்தூர், மே 11- வத்திராயிருப்பு வட்டம் நொண்டி அம்  மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீதா லட்சுமி. இவரது கணவர் முருகன். இவருக்  கும் இவரது தம்பி கணேசனுக்கும் இடையே  சொத்து பிரிப்பதில் பிரச்சனை இருந்துவந்தது. இந்நிலையில் சனிக்கிழமை அன்று தம்பி கணேசன், அண்ணனுடன் தகராறு செய்து கம்பியால் அடித்துள்ளார். இதில்  முருகனுக்கு தலையிலும் வலது கையிலும்  காயம் ஏற்பட்டது.  இதனையடுத்து மனைவி சீதாலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

பேராவூரணி அருகே உழவர் சந்தை  விழிப்புணர்வு கூட்டம்

தஞ்சாவூர், மே 11-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரம், வலப்பிரமன்காடு கிராமத்தில்,  காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.  இந்தக் கூட்டத்திற்கு வேளாண் வணிகம் துணை இயக்குனர் சுதா தலைமை  வகித்து, உழவர் சந்தையின் முக்கியத்துவம் பற்றி கூறினார். வேளாண்மை அலுவலர் தாரா வேளாண் வணிகத்துறையில் உள்ள திட்டங்களை எடுத்துரைத்தார். உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ராஜகோபால், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்களுடைய காய்கறிகளை  பேராவூரணி உழவர் சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெறுமாறு கூறினார். தோட்டப்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு, உழவர் சந்தையில் விற்பனை செய்வதற்கான அடையாள அட்டையை துணை இயக்குனர் வழங்கினார். இந்தக் கூட்டத்தில் உதவி வேளாண்மை அலுவலர் சசிகுமார்,  பாலகிருஷ்ணன், மெய்ஞானமூர்த்தி மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

நாகர்கோவில். மே 11-   குட்டி குருவாயூர் என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவின் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்று,  தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அரசு போக்குவரத்துக் கழக  ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கூட்டம்

அறந்தாங்கி, மே 11-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் சிறப்பு கூட்டம் அறந்தாங்கி கிளைத் தலைவர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த சிறப்பு கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு விளக்கம் மற்றும் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  ஓய்வு பெற்றோர் நல சங்க புதுகை மண்டல பொதுச் செயலாளர் சா.இளங்கோவன், மண்டல மத்திய சங்க பொருளாளர் எம்.பாலசுப்ரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  இதில் போக்குவரத்து கழக  ஓய்வுபெற்றவர்கள் கலந்து கொண்டனர்.