திருப்பூர், ஜன.30 - மார்ச் 18 ஆம் தேதி அகில இந்திய பஞ்சாலை மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கை நாள் கடைப்பிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய பஞ்சாலை, விசைத்தறி தொழிலாளர் ஒருங்கி ணைப்புக் குழு கூட்டம் திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் ஹேமலதா, ஒருங்கிணைப்பு குழு வின் கன்வீனரும், சிஐடியு தேசிய செயலாளரான ஆர்.கருமலையான் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளன தலைவர் எம்.சந்திரன், பொதுச் செயலாளர் எம்.அசோகன், விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் பி.முத்துசாமி மற்றும் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்ச் 18 ஆம் தேதி அகில இந்திய பஞ்சாலை மற்றும் விசைத்தறி தொழி லாளர்கள் கோரிக்கை தினம் கடை பிடிப்பது என்று முடிவு செய்யப் பட்டுள்ளது.
இந்தியாவில் தொழிலாளர்கள் உரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26ஆயிரம் வழங்க வேண்டும், பி.எஃப், இ.எஸ்.ஐ., மற்றும் ஓய்வூதி யம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு சட்டங்களை அமலாக்க வேண்டும், பஞ்சாலைகளுக்கும், விசைத்தறி களுக்கும் சலுகை கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும், இந்திய பருத்திக் கழகம் (சி.சி.ஐ.) மூலம் பருத்திக் கொள்முதலை முறைப்படுத்தி கட்டுப்படியான விலையில் பஞ்சாலைகளுக்கு பருத்தி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். நூல் வங்கி உருவாக்கி விசைத்தறி தொழிலுக்கு கட்டுபடி யான விலையில் நூல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலி யுறுத்தி பிரச்சார இயக்கம் நடத்து வது, மார்ச் 18 கோரிக்கை தினத் தன்று இந்தியாவெங்கும் அனைத்து பணித்தளம் மற்றும் ஆலை வாயில் களில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டது.