கோயம்புத்தூர், நவ. 21 - கோவை ஈஷா யோகா மையத்தில் நடை பெறும் அத்துமீறல்களை கண்டித்தும், ஈஷா மையம் மீதான புகார்கள் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் வியாழனன்று அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈஷா யோகா மையம் அமைந்துள்ள இருட்டுப்பள்ளம் பகுதியில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்த நிலை யில், ஈஷா யோகா மையம் செல்லும் வழி யில் உள்ள ஆலந்துறை பகுதியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலிச்சாமி யார் ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்தில் நடை பெறும் சட்டவிரோத செயல்களின் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கையில் பதாகைகளுடன் பங்கேற்று ஆவேச முழக்கங்களை எழுப்பினர். மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ. ராதிகா தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைச் செயலாளர் பி. சுகந்தி துவக்கி வைத்தார். மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, மாநிலச் செயலாளர் பவித்ரா தேவி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆதிரா (நீலகிரி), லலிதா (ஈரோடு), மல்லிகா (தருமபுரி), சரஸ்வதி (திருப்பூர்), தேவி (சேலம்), சுதா (கோவை), மாவட்டத் தலைவர் ஜோதிமணி, பொருளாளர் உஷா, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி மற்றும் சமூக நீதி மகளிர் சங்கத்தின் தலைவர் கிரிஜா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஈஷாவை முற்றுகையிடுவோம்! முன்னதாக, மாதர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ராதிகா செய்தி யாளர்களிடம் பேசுகையில், “ஈஷா மையம் மீதான புகார்களை விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கும் நிலையில், தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். யானை வழித்தடம் அழிப்பு, மர்மமான முறையில் அங்கிருப்பவர்கள் காணாமல் போனது, காலாவதியான மருந்து கொடுத்தது என ஏராளமான புகார்கள் இருந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கோவை மாவட்ட காவல்துறை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சமூக விரோத செயல் களுக்கு ஆதரவளிப்பதாகவே பார்க்கிறோம். ஈஷா யோகா மீதும், ஜக்கி வாசுதேவ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக விரோத கூடாரமாக ஈஷா மையம் இருக்கின்றது என குற்றம் சாட்டினார்.