குமரி எஸ்.பி., கேடயம் வழங்கி பாராட்டு
சார்பு ஆய்வாளர் பணிக்கான மாதிரி தேர்வு
நாகர்கோவில்,மே 11- கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலினின் முன்னெடுப்பான வெற்றிப்பாதை என்னும் தலைப்பில் மாவட்ட காவல்துறை சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான மாதிரி தேர்வு மே 11 அன்று மாவட்ட ஆயுதப் படை முகா மில் நடைபெற்றது. இந்த மாதிரி தேர்வில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150 பேர் கலந்து கொண்டனர். உடனடியாக தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த மாதிரி தேர்வில் வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் கேடயம் வழங்கி பாராட்டி, ஊக்குவிக்கப்பட்டது. இந்த தேர்வில் கலந்து கொண்ட தேர்வர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பா ளருடன் கலந்துரையாடினர். அவர்களின் பல்வேறு சந்தே கங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் அளித்தார். இந்த மாதிரி தேர்வுகளானது அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் நடைபெறும். இதில் அனைத்து மாவட்டத்தில் உள்ள தேர்வர்கள் கலந்து கொள்ளலாம்.