tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது

சென்னை, மார்ச் 25- தமிழ்நாடு மாநிலப் பாடத்  திட்டத்தில் படித்த 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச்  3 அன்று தொடங்கி நடை பெற்று வந்தது. இந்த தேர்  வினை 7 ஆயிரத்து 518 பள்ளி களில் இருந்து 3 லட்சத்து  78 ஆயிரத்து 545 மாண வர்கள், 4 லட்சத்து 24 ஆயி ரத்து 23 மாணவியர், 18 ஆயி ரத்து 344 தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் 145 பேர் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவர்கள் 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்களில் தேர்வு எழுதி னர். இத்தேர்வுகள் செவ் வாய்க்கிழமையுடன் (மார்ச் 25) நிறைவடைந்தன. இதை யடுத்து விடைத்தாள் திருத் தும் பணிகள் ஏப்ரல் 4 முதல்  துவங்கி நடைபெறும் என்  றும், மே 9 அன்று முடிவு கள் வெளியிடப்படும் என்  றும் தகவல்கள் வெளியாகி யுள்ளன.

கச்சத்தீவு வழக்கு: டி.ஆர்.பாலு மனுதாரராக சேர்ப்பு புதுதில்லி

 மார்ச் 25 - கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது செல் லாது என அறிவிக்கக் கோரி  முன்னாள் முதல்வர்கள் கரு ணாநிதி, ஏ.கே. செல்வராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் செவ் வாயன்று நடைபெற்றது. அப்போது, திமுக தலைவர்  கருணாநிதி மறைந்து விட்ட  நிலையில், அவருக்குப் பதில், திமுக பொருளாளர்  டி.ஆர். பாலுவை மனுதார ராக சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதே போல முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா தொடர்ந்தி ருந்த வழக்கு, அவர் மறை வைத் தொடர்ந்து முடித்து வைக்கப்பட்டு விட்டது குறிப்  பிடத்தக்கது.

மதவெறிப் பேச்சு அண்ணாமலை, எச்.ராஜா மீது சேலத்தில் வழக்கு!

சேலம், மார்ச் 25- திருப்பரங்குன்றம் விவ காரத்தில், மதக் கலவ ரத்தை தூண்டும் வகை யில் பேசியதாக பாஜக தலை வர்கள் கே. அண்ணாமலை மற்றும் எச். ராஜா ஆகியோர் மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் நான்கு பிரி வுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ், சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தி ருந்த புகாரின் பேரில் போலீ சார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ரூபாய் மதிப்பு  

13 காசுகள் குறைந்தது புதுதில்லி

, மார்ச் 25- இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த 7 நாட்களுக்குப் பிறகு  மீண்டும் சரிவைச் சந்தித்  துள்ளது. இறக்குமதியா ளர்களிடம் டாலர்களுக்கான தேவை அதிகரித்ததாலும், முக்கிய நாணயங்களுக்கு எதிராக டாலரின் மீட்சி ஏற் பட்டதாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந் திய ரூபாயின் மதிப்பு செவ் வாய்க்கிழமை 13 காசுகள் குறைந்து, 85 ரூபாய் 74 காசுகள் என்ற அளவிற்கு சரிவைச் சந்தித்தது.