tamilnadu

img

நெல்லை மின் அரங்க சிபிஎம் கமிட்டி செயலாளராக கந்தசாமி தேர்வு

திருநெல்வேலி, அக்.26- பாளையங்கோட்டை தியாகராஜநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மின் அரங்க கமிட்டியின் 10 ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இடைக் கமிட்டி உறுப்பினர் சந்திரசேகர் கட்சி கொடியை ஏற்றி வைத்தார், மாவட்டக் குழு உறுப்பினர் டி. கந்தசாமி மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். இடைக் கமிட்டி உறுப்பினர் வண்ணமுத்து வரவேற்று பேசினார். இடைக்கமிட்டி  உறுப்பினர் தளபதி அஞ்சலி தீர்மானம் வாசித்தார் கட்சியின் மாவட்டச் செயலாளர் க. ஸ்ரீராம் மாநாட்டை தொடங்கி வைத்தார். இடைக்கமிட்டி செயலாளர் பீர் முகம்மது ஷா அறிக்கைகளை சமர்ப்பித்து பேசினார். மாநாட்டில் இடைக்கமிட்டி செயலாளராக டி.கந்தசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் சேர்த்து மொத்தம் 8 பேர் கொண்ட கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது.  மாநாட்டில் குலவணிகர்புரம் மேம்பால பணியை உடனடியாக துவங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்த வேண்டும், மின்விபத்தில் பலியான ஒப்பந்த ஊழியர் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதா 2023 ரத்து செய்ய வேண்டும் மின்வாரியத்தில் பெண்களுக்கு தனி ஓய்வறை வசதி ஏற்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  சி.பி.எம் மாவட்டச் செயலாளர் க. ஸ்ரீ ராம் நிறைவுரையாற்றினார். இடைக்கமிட்டி உறுப்பினர் முத்தையா நன்றி கூறினார்.