districts

சென்னை முக்கிய செய்திகள்

 கிளை மாநாடுகள்

 கிளை மாநாடுகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பண்ருட்டி வட்டத்தில் நடைபெற்ற கிளை மாநாட்டில் தேர்வு பெற்ற செயலாளர்கள் வருமாறு: 
சூரக்குப்பம் கிளை     - ஆர்.ராஜேந்திரன்
சிறுவத்தூர்         - கே.அய்யனார்
திருத்துறையூர் 1     - நந்தகோபால்
பி.ஆண்டிக்குப்பம்     - சி.ஏழுமலை
மேலிருப்பு 1         - கே.அண்ணாமலை
மேலிருப்பு 1         - கே. அண்ணாமலை
மேலிருப்பு 2         - ஏ.கோதண்டபாணி
கீழக்கொல்லை     - எஸ்.சிவகுமார்
பெரிய காட்டுப்பாளையம் - எஸ்.பிரகாஷ்
முத்தாண்டிக்குப்பம்     - கே.தனவேல்
கீழ்குப்பம்         - சி.ராமமூர்த்தி
திருவாமூர்         - கே.வீரப்பன்
காமாட்சி பேட்டை     -  டி.வீரராகவன்
பணிக்கன் குப்பம்     - காசி. லோகநாதன்
அழகப்ப சமுத்திரம்     - எம்.சரவணன்
புதுப்பேட்டை 1         - பி. மணிவண்ணன்
கோட்டலாம்பாக்கம் 1     - வி.வெங்கடேசன்
பண்டரக்கோட்டை     - எ. கிருஷ்ணமூர்த்தி
சின்னப்பேட்டை 1     - சி.அம்பிகாபதி
ராயர்பாளையம் 1     - ஆர்.சீனிவாசன்
ராயர்பாளையம் 2     - எம்.சித்ரா
ராயர்பாளையம் 3     - ஆர்.வெங்கடேசன்
ராயர்பாளையம்  4     - எம்.மஞ்சுளா
ராயர்பாளையம்  5      - எம்.முகேஷ்
ராயர்பாளையம் 6     - எஸ்.கிருபானந்தம்
சேமக்கோட்டை     - சி.சந்தோஷ் குமார்
சேமக்கோட்டை 2     -  ஏ.சிவராமன்
சேமகோட்டை 3     - ஏ.அன்வர் பாஷா
சின்ன சேமக்கோட்டை      - ஆர்.செல்வராஜ்
வீரப்பார்         - ஆர். வெங்கடேசன்
ஃதெற்கு மேல்மாம்பட்டு     - மோகன்ராஜ்
கோட்லாம்பாக்கம் 2     - கே. ஏழுமலை
புதுப்பேட்டை புது நகர்     - என். குருநாதன்
திருத்துறையூர் 2     -  எஸ்.சபரி
சின்னப்பேட்டை 2     - எஸ்.சசிகுமார்
சின்னப்பேட்டை மாதர்     - கே.கலையரசி
காமாட்சி பேட்டை  2     -  ஏ கொளஞ்சியப்பன்
தோப்பு கொள்ளை     - கே.குப்புசாமி
புலவனூர்         - எஸ். செந்தில்
அக்கடவல்லி         - எஸ்.கார்த்திக்
கடலூர் மாவட்ட போக்குவரத்து அரங்கம் 
கடலூர்          - எம். அரும்பாலன்
கடலூர் ஓய்வு பெற்றோர் - கே.குணசேகரன். 
விருத்தாசலம்         - எஸ்.மணிகண்டன்.
நெய்வேலி& வடலூர்      - எஸ்.சரவணன்.
பண்ருட்டி         - கே.சரவணன்.
திருவண்ணாமலை நகரம் 

திருவூடல் தெரு கிளை     - எஸ்.வெங்கடேசன்
தாமரை நகர்         - எம்.தங்கராஜ்
பைபாஸ் கிளை     - கே. பழனி
ஐயங்குளம்         - எஸ்.இலியாஸ் சர்கார்
சிவன் பட தெரு     - என்.கல்யாணசுந்தரம்
ஆட்டோ கிளை     - டி.யுவராஜ்
பே.கோபுரம்         - ஜி. குணசேகரன்
பேருந்து நிலையம்     - எஸ்.ரபிக் பாஷா
மாரியம்மன் கோயில் தெரு - எஸ்.ஷகிலா
நடைபாதை வியாபாரிகள் - எஸ்.சவுகத் அலி
அக்னி தீர்த்தம்      -  வி.செல்வகுமார்
புதுவாணியங்குளம்  தெரு- எம்.கார்த்தி
தண்டராம்பட்டு  வட்டம்
தானிப்பாடி கிளை         - இ. சார வள்ளி
சொன்னானம்பட்டி     -  பி. பழனி
 சே. ஆண்டப்பட்டு     -  கே. வேலு
கடப்பன் குட்டை    - ஆர்.முருகன்
சாத்தனூர்         - என்.ராஜேந்திரன்
தரடாப்பட்டு         - ஆர். ஜெயவேல்
வாணாபுரம் புதூர்     - ஜி. லட்சுமி
வாணாபுரம்         - ஏ கோவிந்தராஜ்
வாழவச்சனூர்         - கே.தணிகாசலம்
தென் முடியனூர்     - சி.குபேந்திரன்
இளையாங்கன்னி     - பி.அந்தோணிசாமி

மாடுகளை பராமரிக்க புதிதாக  12 இடங்களில் மாட்டுத் தொழுவங்கள்

சென்னை,அக்.26- சென்னையில் சுற்றித்திரியும் மாடுகளை ஒரே இடத்தில் வைத்து பராமரிக்க, திறந்தவெளி இடங்களில் தொழுவம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில், மாடுகள் வளர்ப்போருக்கு, அவற்றை பராமரிக்க போதியளவில் இடங்கள் இருக்க வேண்டும். அப்போது தான், மாடுகள் வளர்க்க அனுமதிக்கப்படுவர். அவ்வாறு இடங்கள் இல்லாமல், பலர் கூவம், அடையாறு போன்ற நீர்நிலை ஓரங்களில் மாடுகளை பராமரித்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, மண்டல வாரியாக பொது தொழுவம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பொது தொழுவங்களில், குறைந்த வாடகையில், மாடுகளை பராமரித்துக் கொள்ள முடியும். மாடுகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களும் குறையும். தற்போது சென்னை மாநகராட்சியில் 300 பசுக்கள் மற்றும் எருமைகள் தங்குவதற்கு, ஏற்கெனவே 2 மாட்டுத் தொழுவங்கள் உள்ளது. தற்போது கூடுதலாக 12 புதிய மாட்டு தொழுவங்கள் அமைக்கப்படவுள்ளது. மாட்டின் உரிமையாளர்கள் கட்டண அடிப்படையில் இந்த இடத்தை வாடகைக்கு எடுக்கலாம். இந்த ஆண்டு, அம்பத்தூர், மாதவரம், திரு.வி.க.நகர் ஆகிய இடங்களில், 2,308 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது.

காவலர்கள் குறைதீர் முகாமில் 199 காவலர்கள் கோரிக்கை மனு

சென்னை, அக்.26-  காவலர்கள் குறைதீர் முகாமில், பெருநகர மேற்கு மண்டலத்தில் 199 காவலர்களிடம் காவல்துறை ஆணையர் அருண் கோரிக்கை மனுக்களை பெற்றார். சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வெள்ளியன்று ‘காவலர்கள் குறைதீர் முகாம்’ நடந்தது.   இந்த புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை  எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையரு உத்தரவிட்டார். இந்த சிறப்பு முகாமில் பெருநகர தலைமையிட கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கர், வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர், மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், தலைமையிட இணை ஆணையர் கயல்விழி மற்றும் துணை ஆணையர் மேகலீனா ஐடன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு

வேலூர், அக் 26 - வேலூர் மாவட்டம், காட்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலை யத்தின் சார்பில் பொது மக்களுக்கு விபத்தில்லாத தீபாவளியை கொண்டாடும் வகையில் தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு காட்பாடி ரயில் நிலைய சந்திப்பில் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முரு கேசன் தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்வில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அழகர்சாமி, ஜிஆர்பி காவல் ஆய்வாளர் ருவந்திகா துவக்கி வைத்தனர். ரயில்வே பாதுகாப்பு படை உதவி காவல் ஆய்வாளர் பால கிருஷ்ணன், ஜிஆர்பி உதவி ஆய்வாளர் புஷ்பா, காவலர் பரிமளா மற்றும் காட்பாடி தீய ணைப்பு நிலைய அலு வலர் தணிகைவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஊராட்சி தலைவரை நீக்கக்கோரி போராட்டம்

செய்யூர்,அக்.26- சித்தாமூர் அருகே, ஊராட்சி மன்ற தலை வரை பதவியில் இருந்து  நீக்கக்கோரி, நெற்குணம் ஊராட்சி கிராம மக்கள் சித்தாமூர் ஒன்றிய அலுவ லகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது நெற்குணம் ஊராட்சி. இப்பகுதி ஊராட்சி தலை வராக தமிழரசி ராமலிங்கம் என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்த ஊராட்சி யில் அடங்கிய வயலூர் கிராமத்தில், புதிதாக கல்கு வாரி அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. ஊராட்சிதலைவர் கல்குவாரிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படு கிறது.

தீபாவளி முன்னிட்டு 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை, அக்.26- தீபாவளி பண்டிகையை யொட்டி 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படு வதாக அறிவிக்கப்பட்ட டுள்ளது. அதன்படி, அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக் கம், மாதவரம் புதிய பேருந்து நிலையம் உள் ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக் கப்படுகின்றன.கிளாம் பாக்கத்தில் இருந்து திருச்சி,  கரூர், மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக் குடி, திருச்செந்தூர், நாகர் கோவில், திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள் ளாச்சி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச் சலம், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு  பேருந்துகள் இயக்கப்படு கின்றன.

பட்டாசு மருத்து கண்ணில் பட்டால் தேய்க்கக் கூடாது

சென்னை,அக்.26- பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டுக் கண் மருத்துவமனைக்கு வரும் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் குழந்தைகளும் இளம் பருவத்தினரும்தான். இவர்களில் பெரும்பாலான வர்கள் பட்டாசு வெடிக்கும் போது வேடிக்கை பார்த்த வர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் பட்டாசு வெடித்து கண்ணில் காயம்  ஏற்பட்டால் உடனே கைகளால் கண்ணை கசக்க கூடாது என கண் மருத்துவர்கள் ஆலோ சனை தெரிவித்துள்ளனர்.

மாமல்லபுரத்தில் செயற்கை பவளப்பாறை

மாமல்லபுரம்,அக்.26- மாமல்லபுரம் கடல் பகுதியில் மீன்வளத்தை பாது காக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் கடந்த சில நாட்களாக மாமல்லபுரம் உள்பட சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள், தென்னை ஓலைகள் மற்றும் மூங்கில் குச்சிகளை வைத்து வீடு கட்டி, அவற்றை கடலுக்குள் குறிப்பிட்ட தூரத்துக்கு எடுத்து சென்று இறக்கி, அவற்றின் மூலம் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடலில் மிதக்கும் மூங்கில் வீடுகளில் மீன்கள் வந்து முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதன் மூல மாக மீன்களில் இனப்பெருக்கம் அதிகரிக்கும்’ என்று மீன வர்கள் தெரிவித்தனர்.

கடற்கரை - தாம்பரம், செங்கை மின்சார ரயில்கள் இன்று ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு

 சென்னை,அக்.26- பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ஞாயிறன்று ரத்து செய்யப்படுகிறது. மேலும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை எழும்பூர்- விழுப்புரம் இடையே இன்று அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்களின் வசதிக்கேற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மேலும் சென்னை பூங்கா – தாம்பரம் – செங்கல்பட்டு இடையேயும், சென்னை கடற்கரை- ஆவடி- திருவள்ளூர் இடையேயும், சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையேயும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கஞ்சா, குட்கா விற்ற  18 பேர் கைது

சென்னை,அக்.26-  புளியந்தோப்பு ஆடு தொட்டி பகுதியில் கஞ்சா மற்றும் குட்கா விற்ற புளியந்  தோப்பு கே.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்த துரை (65), வல்லரசு (29), சிங்கம் (எ) கதிரவன் (21), கணேஷ் (22), இளங்கோவன் (51), விக்னேஷ் (28) உள்ளிட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூடுவாஞ்சேரியில் இடிந்து விழுந்த  பள்ளி சுற்றுச்சுவர்

செங்கல்பட்டு, அக்.26- நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி யின் 150 ஆடி தூர சுற்றுச்  சுவர் நள்ளிரவில் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி-நெல்லிக் குப்பம் சாலை ஓரத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் நந்தி வரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு, சுமார் 2700 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலை யில், இப்பள்ளியை சுற்றி பொதுப்பணித்துறை சார்பில் பல ஆண்டுக ளுக்கு முன்பு கட்டப்பட்ட சுற்றுச்சுவர் திடிரென விழுந்தது.