districts

img

காரைக்கால் மாவட்டத்திற்கு சிறப்பு திட்ட நிதி ஒதுக்க வேண்டும் சிபிஎம் மாநாடு வலியுறுத்தல்

புதுச்சேரி, அக். 26- காரைக்கால் மாவட்ட த்திற்கு சிறப்பு திட்ட நிதியை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் காரைக்கால்  இடைக்குழு மாநாடு புதுச்சேரி அரசை வலி யுறுத்தியுள்ளது. சிபிஎம் புதுச்சேரி-காரைக்கால் இடைக்குழுவின் 24வது மாநாடு தோழர் தாண்டவ சாமி நினைவரங்கத்தில் நடைபெற்றது. மூத்த உறுப்பினர் என்.எம்.கலியபெருமாள் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். ராஜேந்திரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். பிரேம்குமார் வரவேற்றார். நிலவழகன்,தமிழரசி ஆகியோர்  தலைமை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார். செயலாளர்  தமீம் அன்சாரி அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கொளஞ்சியப்பன்,மாநிலக்குழு உறுப்பினர் வின்சென்ட் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இறுதியாக புதுச்சேரி மாநிலச் செயலாளர் ராஜாங்கம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். புதிய இடைக்குழு இம்மாநாட்டில் 9 உறுப்பினர்களை கொண்ட காரைக்கால் இடைக்குழு செயலாளராக தமீம் அன்சாரி தேர்வு செய்யப்பட்டார். தீர்மானம்  காரைக்காலில் புதிதாக அமைய உள்ள ஜிப்மர் மருத்துவமனையின் கிளையை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.  காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு புதுச்சேரி அரசு சிறப்பு திட்ட நிதி உருவாக்கி கூடுதல் நிதியை வழங்க வேண்டும். காரைக்காலில் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.