districts

img

மரவள்ளிக்கிழங்கு விலை கடும் வீழ்ச்சி: கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, அக்.26 - மரவள்ளிக் கிழங்கு வரலாறு காணாத கடும் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரவள்ளி பயிர் செய்த விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ. 16 ஆயிரம் வழங்க வேண்டும். மரவள்ளிக் கிழங்கை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்து மழையால் நட்ட மடைந்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 50 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சே கோசர்வ் ஆலையை விரைவில் அமைக்க வேண்டும். நடப்பாண்டிற்கான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய சேலம் சேகோசர்வ நிர்வாகத்துடன் முத்தரப்பு கூட்டத்தை நடத்த வேண்டும். மற்ற பயிர்களுக்கு உள்ளது போல் மர வள்ளிக்கும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் டி.ஏழுமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எ.வி. ஸ்டாலின் மணி, பொருளாளர் எம்.சி. ஆறுமுகம், வி.நாகராஜன், எம்.வி.ஏழு மலை, சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் ஜி.மணிமாறன், தலைவர் எ.சக்திவேல், பொருளாளர் ராம்குமார், எஸ்.கோவிந்தன், சாமிநாதன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முன்னதாக, மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.